பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பதித்தாம்பு வாங்கிநின்று அம்பரம் பம்பரம் பட்டுழல மதித்தான் திருமரு காமயில் ஏறிய மாணிக்கமே! (உலகில் பிறந்து அங்கே திரிவதையும் சாவதையும் போக்கி என்னை உனக்குள் கரைந்துவிடும் ஒன்றாக அமைத்து, ஆண்டு கொண்டு அருள் தரும் காலம் ஒன்று உண்டோ? மந்தர மலையை மத்தாக நட்டு, பாம்பரசனாகிய வாசுகியென்னும் கயிற்றை இழுத்து நின்று, ஆகாசம் பம்பரம் போன்ற நிலையை அடைந்து சுழலப் பாற்கடலைக் கடைந்த திருமாலின் அழகிய மருமகனே! மயில் மேல் எழுந்தருளிய மாணிக்கம் போன்றவனே! ஆங்கு - அப்படியே என்றும் கொள்ளலாம். உன்னில் ஒன்றா விதித்து ஆண்டு அருள் தருதல் என்பது அத்வைத முத்தியை அருளுவதைக் குறித்தது. உரகபதி - அரவரசன். வாங்கி - இழுத்து. அம்பரம் - ஆகாசம். மதித்தான் - கடைந்தவன்.) i46