பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 எல்லைக்குள் அடங்கியவைகளே. பண்ணின அலங்காரம் மங்காமல், மறையாமல் ஒளி வீசிக் கொண்டிருக்க கூடிய வண்ணம் தமிழ்ச் சொல்லால் அலங்காரம் செய் என்று ஆண்டவனே அர்ச்சனை பண்ணுகின்ற ஒரு குருக்கள் ஐயாவினுடைய குழந்தையைப் பார்த்துக் கூறினான். பல மலர்களால் நாள்தோறும் பூசை செய்யும் கடமையை மேற்கொண்ட சுந்தர மூர்த்தி நாயனாரிடம், "அர்ச் சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்' என்று சேக்கிழார் பாடுகிறார். சுந்தரருடைய திருவாக்கினாலே சூட்டப்படுகின்ற நல்ல சொல் மலர் மாலையை அணிந்து கொள்ள வேண்டுமென்று ஆண்டவன் விரும்பினான். அந்த மாலை அந்தக் காலத்தில் மட்டும் மணத்தைத் தருவதோடு நில்லாமல் எல்லாக் காலத்திலும் மணத்தைத் தரக்கூடியது. வேறு வேறு காலத்தில் வருகின்றவர்கள் யார் யார் படித்தாலும் அவர்கள் உள்ளம் நைந்து உருகச் செய்வது. அருணகிரியார் செய்தது கையால் மலர் மாலைகளால் எம்பெருமானுக்கு அலங் காரம் செய்வதைவிடச் சொல் மாலைகளால் அலங்காரம் பண்ணி மக்களுடைய உள்ளத்தில் இறைவனது நினைவைப் பதியச் செய்யலாம் என்று நினைத்தார் அருணகிரிநாதப் பெருமானும், அந்த நினைவில் எழுந்த சொல்வளம் மிக்க மாலைதான் கந்தர் அலங்காரம். அந்தச் சொல் வளத்தையும் ஆண்டவன் அருளாலேயே அவர் பெற்றிருந்தார். 'அருணதள பாத பத்மம் அதுநிதமு மேதுதிக்க அரியதமிழ் தானளித்த மயில்வீரா' என்று திருப்புகழில் பாடுகிறார். ஐந்து இலக்கணங்களும் பொருந்திய அழகான தமிழை, தமிழுக்குத் தலைவனாக விளங்கும் முருகப் பெருமான் உலகத்திற்கு வழங்கினான். சிவபெருமானிடத்தி லிருந்து அகத்தியர் நேரே தமிழைக் கற்றாலும், அவருக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்தவன் குமார நாயகன். அது மாத்திரம் அன்று. சங்கத்திலே தலைமைப் புலவராக வீற்றிருந்த நக்கீரர் எழுதிய இறையனா ரகப்பொருள் உரையே சிறந்த உரை 148