பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 'மலைக்குமேல் மலைவிளக்காம் அழகா வேத வான்குதலை நான்குதலை மகனார் வாளா தலைக்குமேல் எழுதுகின்றார்”. 'மலைக்குமேல் விளக்குப் போட்டாற்போல இருக்கும் அழகா, உன் பிள்ளையாண்டானைப் பற்றி என்ன சொவ்வது? அவன் உளறினாலும் அது வேதமாக இருக்கிறது. வேதத்தை மழலைப் பேச்சிலே சொல்கிறான். உன் பிள்ளையாகப் பிறந்ததனால் இந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.' "வேத வான்குதலை நான்குதலை மகனார்” என்று தொடங்குகிறார். ஒரு பெரிய உத்தியோகஸ்தர். அவருக்கு ஒரு சிறிய பிள்ளை; மிகவும் துஷ்டப் பிள்ளை. வீட்டு வேலைக்காரனைக் காலாலும் கையாலும் உதைக்கிறான். வேலைக்காரனுக்கு மிகக் கோபம் வருகிறது. வீட்டு எசமானரின் குழந்தையாகையால் அக்குழந் தையைத் திருப்பி அடிக்க மனம் துணியவில்லை. வேகமாகப் போய் எசமானரிடமே முறையிட்டுக் கொள்கிறான். 'சாமி, சின்ன எசமானார் காலாலும் கையாலும் என்னை உதைக்கிறார்' என்று சொல்கிறான். அந்தக் குழந்தையிடம் அவனுக்குக் கோபம் இருந்தாலும், 'அவன் உதைக்கிறான்' என்று சொல்லாமல், 'சின்ன எசமானர் உதைக்கிறார்' என்று மரியாதையாகச் சொல் கிறான். அந்தக் குழந்தைக்காக இல்லாவிட்டாலும், அதைப் பெற்ற தன் எசமானருக்கு மரியாதை கொடுக்கத்தானே வேண்டும்? அப்படி இந்தப் பக்தர் சோலைமலை அழகரிடம் 'உன் னுடைய மகனார் இன்னது செய்கிறார்” என்று சொல்கிறார். “Бшт6ТТ தலைக்குமேல் எழுதுகின்றார் அரி என்று எங்கள் தாலத்தின் மேல்எழுதச் சமர்த்தி லாரோ?” உடம்புக்குள்ளேயே மிகவும் வன்மையான பொருள் மண்டை ஒடு. மிகவும் மென்மையானது நாக்கு. "எல்லா வேதங்களையும் நன்கு தெரிந்து கொண்டிருக்கிற இந்தக் குழந்தை மிகவும் மென்மையான என் நாக்கிலே எழுதக் கூடாதா?’ என்று கேட் கிறார். தாலம் நாக்கு. தாலம் என்பதற்குப் பனை என்றும் ஒரு பொருள் உண்டு, 'ஒட்டிலே எழுதுகிறானே; அரி என்று 152