பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பெருமான் திருவடி என் தலைமேல் பட்டது; அவ்வளவு தான்; அழிந்து போய்விட்டது. அயன் கையால் எழுதியதை எம்பெரு மான் காலாலே அழித்து விட்டான்' என அலங்காரமாகச் சொல்கிறார். ജൂഖ് கால்பட்டு அழிந்தது.இங்கு என்தலை மேல்அயன் கையெழுத்தே. இங்கு - இந்த உலகத்தில். அழகு படுத்துதல் எம்பெருமானின் திருவடி பட்ட மாத்திரத்திலே பிறவி போகும் என்ற கருத்தைச் சொல்ல வந்தவர் அலங்காரமாகச் சொன்னார். அதற்கு மேலும் அலங்காரம் செய்திருக்கிறார். எத்தனைக்கு எத்தனை ஒரு கருத்தைச் சுற்றிப் பல கருத்துக்களை விரிக்கிறோமோ அத்தனைக்கு அத்தனை அழகு அதிகமாகும். இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வைரக்கல் வாங்கினாலும் இரு பத்தைந்து ரூபாய் தங்கமாவது வாங்கி வைரத்தை அதன் நடுவில் வைத்துக் கட்டித்தானே போட்டுக் கொள்கிறார்கள் மக்கள்? இலைக்கு நடுவிலே வைக்கப்படுகிற சோறு கொஞ்சமாக இருந் தாலும் அதைச் சுற்றிக் கறி, கூட்டு, பச்சடி, பாயசம் போன்ற நிலைக்களப் பொருள்கள் அதிகமாக இருந்தால் தான் அதைப் பெரிய விருந்து என்று சொல்கிறோம். அப்படி ஆண்டவன் திரு வருளால் பிறவி இல்லை' என்று சொல்ல வந்தார் அருண கிரியார். அந்தக் கருத்தை மிகவும் அழகுபடப் பாடுகிறார். அவன் கால்பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல்அயன் கையெழுத்தே. 'அயன் என் தலையிலே எழுதிய எழுத்து அந்தச் சின்னக் குழந்தை தன்னுடைய திருவடியை என் தலைமேல் வைத்த போது அழிந்துவிட்டது என்று அவர் சொல்லும் போதே, 'அவன் திருவடி படுகின்ற இடத்திலே நான் தலையை வைத்தேன் என்கிற குறிப்பும் இருக்கிறது. 154