பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 கிறது. ஆகவே முன்னால் அழிவு செய்த ஒன்றை, மற்றொன்று அழிக்குமானால் இந்த அழிவு அழிவு ஆகாமல் ஆக்கம் ஆகிறது. அப்படி நம் மண்டையோட்டின் மேல் அயன் எழுதிய எழுத்து இன்பத்தை எல்லாம் அழித்துவந்தது. இன்பங்களை அழிக்கும் தலை எழுத்தை எம்பெருமான் தன் திருவடியினாலே இப்போது அழித்தான் என்றால் இந்த அழிவு ஆக்கம் ஆயிற்று; பேரின்பத் திற்குக் காரணமாயிற்று. அழிவுக்கு அழிவு தேடி ஆக்கம் அளிக்கும் பெருமான் வாழ்கின்ற திருச்செந்தூர் எப்படி இருக் கிறது? நாட்டுப் படலமாக அது பாட்டின் முன்னடியில் விரிகிறது. நாட்டுப் படலம் திருச்செந்துருக்குள் நுழையும்போதே வயலைப் பார்க்கலாம். சுற்றிச் சூழச் சோலைகளைப் பார்க்கலாம். நீர்நிலைகளைப் பார்க்கலாம். பார்த்த உடனேயே அவ்வூரின் நிலவளம், நீர்வளம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். செங்கதிர்கள் தழையப் பயிர்கள் வளர்ந்து சாய்ந்து இருப்பதைப் பார்த்தவுடனேயே நிலவளம் தெரியாதா? நிலவளத்தைக் காட்டுகிறது? வயல்களில் வளர்ந்து தழைந்து இருக்கும் பயிர்கள். வயல், பொழில் எல்லாம் ஒரே பச்சைப் பசேல் என்று தெரிவதிலிருந்தே, நல்ல நீர்வள முள்ள பகுதி என்பதைத் தெரிந்து கொள்ளலாம். வயல்களில் சேல் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. கொழு கொழுவென்று வளர்ந்த அவை செந்தூரின் நீர் வளத்தை மட்டுமா காட்டுகின்றன? அங்கே வாழும் மக்களின் நீர்மை வளத்தையும் காட்டுகின்றன. அவற்றைப் பிடித்துப் பயன்படுத்து வார் யாரும் இல்லை. எல்லோரும் சைவர்கள்; உணவில். இப்படி வள வயல்களில் வளரும் மீன்கள் என்ன செய்கின்றன பாருங்கள். சேல்பட்டு அழிந்தது. செந்தூர் வயற்பொழில் பிடிப்பார் யாருமின்றி நல்ல வளப்பமாக வளரும் சேல் மீன்கள் சும்மா இருக்குமா? துள்ளிக் குதிக்கும். வயல்களுக்குப் பக்கத்தில் சோலைகள் இருக்கின்றன. அந்தச் சோலை மரங்களின் நிழல் வயலிலே விழுகின்றது. நிழல் விழுந்தால் பயிர் வளராது அல்லவா? வயல்களின் நிழல் விழச் செய்யும் மரங்களை யாராவது வெட்டுகிறார்களா? இல்லை. ஆனால் தம்மைக் 156