பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்க்கு நல்ல பெருமாள் கோயில் என்றும் குளம் என்றும் அலைந்து, ருத்திராட்சம் என்றும் திருநீறு என்றும் அணிந்து, பஞ்சாட்சரம் என்றும் ஷடாட்சரம் என்றும் ஜபம் செய்து பக்தி பண்ணி வாழும் மக்களைப் பார்த்து எள்ளி நகையாடும் அறிவாளிகள் பலர் இப்பொழுது மலிந்துவிட்டார்கள். கலைஞர்களாக இருந்தவர்கள் மாறித் தொழிலாளர்களாகி வருகிறார்கள். கலைஞன் தான் செய்யும் காரியத்தில் ஈடுபட்டு, தன்னை மறந்து, அக்காரியத்தால் கிடைக்கும் கூலியை வேலைசெய்யும்போது மறந்து நிற்கிறான். தொழிலாளி தன் தொழிலைச் செய்யும்போது பின்பு அதனால் கிடைக்கின்ற பயனில் எப்போதும் நினைவு வைத்தே ஈடுபடு கிறான். இந்தத் தொழிலாளி மனப்பான்மை வளர்ந்து விட்ட தனால் நாம் செய்யும் காரியங்கள் எல்லாம் அப்போதைக்கப் போது பலன் தரக்கூடியனவாக இருக்க வேண்டுமென்று நினைக் கிறோம். வையமும் வானமும் தெய்வம் இருக்கிறதென்று யாராவது சொன்னால் அதை நம்ப மாட்டோம் என்று சொல்கிறோம். 'அது கைமேல் பலன் தருகிறது அல்லவே! என்று நினைப்பு. மாணவர்கள் இந்த முறையில் பேசக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். 'வையத்தைப் பாராமல் வானத்தைப் பார்க்கிறீர்களே! என்று பக்தர்களைப் பார்த்துச் சொல்ல அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் பெரு மக்களும் இருக்கிறார்கள். ஆண்டவனை நினைக்கிறவர்கள், 'வையம் இன்னது, வானம் இன்னது" என்று தெரியாமல் வாழ்பவர்களென்று இவர்கள் நையாண்டி செய்கிறார்கள். வையத்தையும் வானத்தையும் ஒருங்கே நினைக்கின்ற சமயம் நம்முடையது என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள். வையத்தை நன்றாக உணர்ந்து கொண்டு வானத்தையும் எட்டிப் பிடிக்க முயன்றவர்கள் நம் நாட்டுப் பெருமக்கள். வையம் க.சொ.III-2