பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பெண்ணும் அவ்வாறே மனித மனத்தின் தீய உணர்ச்சியைத் தூண்டிவிடும் பொருளாக இருக்கிறாள். இந்தக் காரணத்தால் துறவியர் மண், பெண், பொன் என்னும் மூன்றையும் வெறுத்தார்கள். பெரும்பாலான மக்கள் இந்த மூன்றையும் நேர்மையான வழியில் அற நினைவோடு அணுகுவதில்லை. அதனால் அவற்றைச் சிந்திக்காமலே இருந்துவிடலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். மகளிர் உறவு GlLlair என்றால் உடனே மயல் என்ற நினைவுதான் நமக்கு உண்டாகிறது. உலகத்துப் பெண் குலத்தின் பெருமையை நாம் அறிந்திருந்தாலும் மறந்துவிடுகிறோம். பெண்ணை நான்கு வகையான உறவுகளில் வைத்துப் பார்க்கிறோம். தாயாகவும் மகளாகவும் சகோதரியாகவும் மனைவியாகவும் பெண் இருக் கிறாள். இந்த நான்கும் நேர்மையான உறவு. இறைவனுக்கும் இறைவிக்கும் உள்ள உறவு முறையைச் சொல்ல வந்த குமர குருபர முனிவர் இந்த நான்கையும் சொல்கிறார். 'கனக மார்க வின்செய் மன்றில் அனக நாட கற்கெம் அன்னை மனைவிதாய் தங்கை மகள்.' மனைவியின் நிலை தாயின் நினைப்பிலே இணையற்ற அன்பு மீதுர்கிறது. தங்கை என்னும்போது சகோதர பாசம் பிணிக்கிறது. மகள் என்னும்போது வாத்ஸல்யம் பொங்குகிறது. மனைவி என்னும் உருவில் அறமும் இன்பமும் இணைந்து காட்சியளிக்கின்றன. பெண்ணினத்தின் உறவு முறையில் நான்கில் ஒரு பகுதி மனைவி என்ற உறவு. ஒரு பெண்ணை மனைவியாக ஒருவன்தான் கொள்ள லாம். ஆனால் தாயாகத் தங்கையாகப் பலர் கொள்ளலாம். மகளாகவும் கொள்ளலாம். இந்த நான்கு முறையையும் விட்டு வெறும் காம நுகர்ச்சி ஒன்றையே கருதிப் பெண்ணை நோக்கும் விலங்குணர்ச்சி மக்களிடம் நிரம்பியிருக்கிறது. மனைவியிடம் இன்பம் நுகரவில்லையா என்ற கேள்வி எழலாம். ஆம்; இன்பம் தருவதற்காக அமைந்தவள் மனைவி என்பது உண்மை. அறம் பொருள் இன்பம் வீடு என்று உறுதிப் பொருள்களை நான்காகப் 166