பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 கனியைச் சுவைத்தவர்கள் வித்தைப் புதைத்து மரத்தை வளர்க்க வேண்டும். இந்தக் கடமைக்குக் கூலிபோலக் கனி இருக்கிறது. அறம் இடையீடின்றி நடைபெறப் பரம்பரை வளரவேண்டும். பரம்பரை விருத்தியாகும் பொருட்டு இன்பத்தை உடன் வைத் திருக்கிறான் இறைவன். அறம் வளர்க்க இன்பம் என்னும் கூலி கிடைக்கிறது. தர்மம் வளரவேண்டுமென்ற நினைவோடு மனிதன் மணம் புரிந்து கொள்ள வேண்டும். அற நினைவு கவே மனைவியைப் பார்த்தால் அறம் நினைவுக்கு வர வேண்டும். பெண்களைக் கண்டால் அறத்தை நினைக்க வேண்டும்; 'அறத்தை நினைக்காமல் வெறும் இன்பத்தை நினைந்து பெண்களைத் தேடி அலைந்துவிட்டேனே! பால் போன்ற இனிமையான மொழியை உடைய மங்கையரை நாடிச் சென்று மயல் பட்டுத் திரிகின்றேனே' என்றும், 'தர்மத்தின் வடிவமாகப் பார்க்க வேண்டியவளை, என்னுடய காமத் தீயை வளர்க்கும் விறகுக் கட்டையாகப் பார்த்து மயக்குமுற்றுத் திரிகின்றேனே!" என்றும் ஒவ்வொருவனும் இரங்க வேண்டும். நமக்குப் பிரதி நிதியாக இருந்து அருணகிரியார் அந்தக் கருத்துக்களை இந்தப் பாட்டில் சொல்கிறார். பாலை அனைய மொழியார்தம் இன்பத்தைப் பற்றிஎன்றும் மாலேகொண்டு உய்யும் வகைஅறியேன், மலர்த் தாள்தருவாய்; காலே மிகஉண்டு, காலே இலாத கணபணத்தின் மேலே துயில்கொள்ளும் மாலோன் மருக!செவ் வேலவனே! மயலுக்குக் காரணம் ©LITಣ6T பார்த்தவுடன் உள்ளம் மயல் அடைவதற்குக் காரணம் நம்முடைய உள்ளம் மாசு உடையது என்பதுதான். பெண்ணின் மேல் குறை ஒன்றும் இல்லை. நல்ல பால் இருக் கிறது. அதை நல்ல பாத்திரத்தில் வைத்தால் கெட்டுப் போவ தில்லை, அழுக்குள்ள பாத்திரத்திலோ, ஆகாத பாத்திரத்திலோ வைத்தால் அது திரிந்துவிடும். திரிவதற்குக் காரணம் பாலின் குறை அன்று. அதை ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் குறைதான். அப்படியே பெண்கள் கெட்டவர்கள் அல்ல. பால் போன்ற இனிமையான மொழியை உடையவர்கள்தாம். 168