பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறமும் இன்பமும் பாலே அனைய மொழியார். பாலைக் கெட்ட பாத்திரத்தில் வைத்தால் கெட்டுத்தானே போகும்? அப்படி நம்முடைய மனம் பக்குவம் இல்லாத காரணத்தினால் பாலே அனைய மொழியாரைப் பற்றும் போது புளித்துப் போகிறது. பாலே அனைய மொழியாரைப் பற்றுவது தவறு அல்ல. எந்த நோக்கத்தைக் கொண்டு பற்றிக் கொள்ள வேண்டுமோ அதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். அறத்திற்காக அவர் களைப் பற்ற வேண்டும். அப்போது மயல் உண்டாகாது; பரம் பரையான தர்மம் வளரும். அதன் சார்பில் இன்பத்தையும் வீட்டையும் பெறலாம். ஆனால் மயல் உண்டாவதற்கும் மால் கொண்டு உய்யும் வழி தெரியாமல் திண்டாடுவதற்கும் காரணம் மங்கையரிடத்தில் அறத்தைக் கருதாமல் வெறும் இன்பத்தைக் கருதுவதுதான். - பாலை அனைய மொழியார்தம் இன்பத்தைப் பற்றி, என்றும் மாலே கொண்டு தர்மத்தின் வடிவமாக விளங்கும் பெண்களைத் தம்முடைய தாயாக, தங்கையாக, மகளாகப் பாவிக்க வேண்டும். தன்னுடைய சொந்த மனைவியை அறத்தை வளர்க்கும் துணையாகவும், அதற்குக் கூலியாகிய இன்பம் தருபவளாகவும் நினைக்க வேண்டும். அவ்வாறின்றி அறத்தை மறந்து, வீட்டு நெறிக்கு உரிய அறங்கள் செய்வதற்கு வேண்டிய துணை அவள் என்பதை மறந்து, அவளால் வரும் இன்பத்தைப் பெரிதாக நினைந்து பற்றினால் அதனுடைய பயன் மயல் அல்லது மயக்கந்தான். பிணத்தைத் தழுவுதல் பெண்ணுக்கு உடம்பு உள்ளம், உயிர் என்ற மூன்றும் இருக்கின்றன. உயிரால் பெண் ஆணோடு கலந்து உத்தமமான காதல் பண்ணுகிறாள். உள்ளத்தால் அவன் செய்யும் அறத்திற்குத் துணைவி ஆகிறாள். உடம்பால் அவனுக்கு இன்பம் தருகிறாள். உயிரையும் உள்ளத்தையும் புறக்கணித்துவிட்டு உடம்பை மாத்திரம் விரும்புகிறவன் ஊன்விலை வாணிகன் ஆகிறான். உயிர் அற்ற ஊன் பிணம். ஆதலால் பாலே அனைய மொழியார் தம் உயிரை 169