பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 யும், உள்ளத்தையும் விலக்கி உடம்பினால் பெறுகின்ற பயனை மாத்திரம் அடைகிறவன் பிணத்தைக் கட்டிக் கொண்டு வாழ் கிறவன் ஆகிறான். அதனால்தான் விலைமகளை நாடுகின்றவர் 35GT, GTI, 'பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையுள் ஏதில் பிணம்தழிஇ யற்று' என்று வள்ளுவர் சொல்கிறார். இறைவன் செயல் இறைவன் தட்சிணாமூர்த்தியாக மோனத்தில் இருந்தான். அந்த மோனம் கலைந்த பிறகு அறத்தின் வடிவமாகிய பார்வதியை மணம்செய்து கொண்டான். உலகத்தில் அறத்தை நன்கு நிலை நிறுத்தி வளரச் செய்ய வேண்டுமென்று கருதியே அறப்பெருஞ் செல்வியை மணந்தான். அந்தத் திருமணத்திற்குப் பின்பு முருகன் அவதரித்தான். முருகன் திருஅவதாரத்தினால் அறம் வளர்ந்தது; மறம் நலிவுற்றது. காந்தியின் விளக்கம் தவறான வழியில் சென்று குடி காமம் முதலியவற்றால் அலைப்புண்டு திரிந்த தம் மூத்த மகன் ஏன் அப்படி இருந்தான் என்பதற்கு மகாத்மா காந்தி விளக்கம் சொன்னார். 'நான் காம உணர்ச்சியோடு என் மனையாட்டியை நாடிய காலத்தில் பிறந்த வன் அவன். அதனால் இப்படி இருக்கிறான்' என்று அவர் சொன்னார். அற நினைவு மாறி, இன்பம் ஒன்றையே குறியாகக் கொண்டு மனையாட்டியோடு சேர்ந்து வாழ்ந்தால் அது விலை மகளோடு வாழ்கின்ற வாழ்க்கை ஆகிவிடும். அறமும் இன்பமும் இதனை நினைந்தே அருணகிரியார், 'பெண்களிடத்தில் அறத்தைக் கருதாமல் வெறும் இன்பத்தை மாத்திரம் எண்ணி மயக்கம் அடைந்து அதனால் உய்யும் வகையை இழந்தேன்' என்று பேசுகின்றார். பாலை அனைய மொழியார்தம் இன்பத்தைப் பற்றிஎன்றும் மாலேகொண்டு உய்யும் வகை அறியேன். 17Ο