பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்காத் தலை கொண்டு பிச்சை கேட்கிறான். அந்தக் கோரக் காட்சியைப் பார்த்து எத்தனையோ பேர் காசைக் கொடுத்து விடுகிறார்கள். கையைக் கீறிக் காயமாவதனால் அவனுக்குத் துன்பம் இல்லையா? உண்டு. ஆனால் பிச்சைக் காசிலே அவனுக்கு இருக்கும் ஆசையின் வலிமை, கையைக் கீறிக் கொள்ளும்போது ஏற்படுகின்ற உணர்ச்சியை உணர்ந்தும் அதைப் பொருட்படுத்தாத திண்மையை அளிக்கிறது. இது வறுமையினால் உண்டாகும் மனத்திண்மை. வீரன் நிலை வீரத்தினால் எழுகின்ற மனத்திண்மையும் உண்டு. போர்க் களத்தில் ஒரு வீரன் தன்னைத் தாக்க வருகின்ற யானையை எதிர்த்தான். தன் கையிலுள்ள வேலை விட்டு யானையைக் கொன்றான். அந்த வேல் யானையின் உடலில் புகுந்து விட்டது. கையில் வேறு படை இல்லை. போர்க் கருவி எதுவுமின்றி, தன்னைத் தாக்க வருகின்ற பகைவரோடு போர் செய்ய என்ன ஆயுதம் கிடைக்கும் என்று சற்றே யோசித்தான். குனிந்தான், தன் மார்பிலே பகைவர்கள் வீசிய வேல் ஒன்று இருந்தது. அதைப் பறித்துக் கொண்டு போர் செய்தான். "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்’ என்பது குறள். வேல் உடலில் தைத்த போதும் வலிக்கிறதே" என்று அவன் அழவில்லை. உடலில் பாய்ந்து நிற்கும் வேலை உருவிய போதும், 'நோகிறதே என்று அவன் கலங்கவில்லை. அவனுக்கு உணர்ச்சி இல்லாமலா போய்விட்டது? வலி உணர்ச்சி இருக்கும். வெற்றியின் மேல் உள்ள காதலின் வலிமை சரீர அபிமானத்தை மறக்கச் செய்தது. அந்த அளவுக்கு அவன் மனம் மரத்துவிட்டது. - பிச்சை வாங்கிப் பிழைக்கிற கல்லுளிமங்கன் காசினிடம் உள்ள பற்று மிகுதியால் கைகளைக் கீறிக் கொள்ளும்போது துன்பத்தை உணராத மனத்திண்மை உடையவனாக இருக்கிறான் என்றால், போர்க்களத்திலே அமர் செய்யும் வீர மகன் தன் மார்பிலே தாங்கி நிற்கும் வேலினால் ஏற்படும் நோவை உணராது வெற்றியின்மேற் கொண்ட காதலால் அதையே பறித்துக் 177