பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 கொண்டு போராடும் அளவுக்கு மனத்திண்மை உடையவனாக இருக்கிறான் என்றால், அருளியலிலே வாழ்கின்ற மக்களுக்கு, எம்பெருமானின் தாளைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழ் கின்ற மக்களுக்கு, மிகப் பெரிய உயர்ந்த லட்சியத்தை மனத் திடையே கொண்டு மக்களுக்கு, அதைவிடப் பன்மடங்கு மனத் திண்மை இல்லாமலா போகும்? மெய்ப்பொருளார் வரலாறு "மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்' என்ற லட்சி யத்தைக் கொண்டு வாழ்ந்த அரசர் மெய்ப்பொருள் நாயனார். அவருடைய பகைவன் முத்திநாதன் எத்தனையோ தடவைகள் படை எடுத்து வந்து நாயனாரை வெல்ல முடியாமல் தோற்று ஒடிப் போனான். நேருக்கு நேர் நின்று அவரை வெல்லும் ஆற்றல் தனக்கு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அவ்வஞ்சகன் எப்படியாவது அவரைக் கொன்றுவிட வேண்டுமென்று முடிவு கட்டினான். மெய்ப்பொருள் நாயனார் மெய்த்தவ வேடமே மெய்ப் பொருள் எனக் கொண்டு வாழ்பவர் என்பதை அவன் உணர்ந்தவனா கையால் சிவனடியார் வேடம் தாங்கிச் சென்றான். உடம்பெல் லாம் நீறு பூசிக் கையிலே ஒரு புத்தகக் கட்டுப்போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு அதில் மறைவாக ஒரு வாளைச் செருகிக் கொண்டு போனான். நேரே மெய்ப்பொருள் நாயனாரை அணுகி, "எங்கும் கிடைக்காத ஒர் ஆகம நூல் எனக்குக் கிடைத்திருக் கிறது. அதை உனக்கு உபதேசிக்கலாம் என்று வந்தேன்' என்றான். நாயனார் அந்த உபதேசத்தைக் கேட்கப் பணிந்து நின்றபோது அந்த வஞ்சகன் வாளை உருவி அவரைக் குத்தி விட்டான். அப்பொழுது அவர் அவனை எதிர்க்கவில்லை. அவனைத் தொழுவதையும் நிறுத்தவில்லை. இதைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் சொல்கிறார். 'கைத்தலத் திருந்த வஞ்சக் கவளிகை மடிமேல் வைத்துப் புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும்போழ்தில் பத்திரம் வாங்கித் தான்முன் நினைந்தஅப் பரிசே செய்ய மெய்த்தவ வேட மேமெய்ப் பொருள்எனத் தொழுது வென்றார்” என்பது அவர் பாடல். 178