பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 எது வென்றது? முத்திநாதனுக்கும் மெய்ப்பொருள் நாயனாருக்கும் போர் நிகழவில்லை என்பது உண்மை. ஆனால் வேறு போர் அங்கே நிகழ்ந்தது. அது மிகவும் நுட்பமான போர். மெய்ப்பொருள் நாய னாருடைய கொள்கை, "மெய்த்தவ வேடமே மெய்ப் பொருள்' என்று தொழுவது. அந்தக் கொள்கையின்படி அவர் முத்திநாதனை வணங்கினார். அப்போது அந்தக் கொள்கையைத் தளரச் செய்ய ஒரு நிகழ்ச்சி நடந்தது. முத்திநாதன் வாளெடுத்துக் குத்தினான். மெய்ப்பொருள் நாயனாருடைய உடல் உயிரை இழக்கும் நிலையை அடைந்தது. உடம்பின் வேதனையும் உள்ளத்தின் கொள்கையும் எதிரெதிரே நின்று போராடின. சரீராபிமானம் வென்றதா, கொள்கை வென்றதா என்பதை நோக்க வேண்டும். அவர் தம் கொள்கையை விடாமல் தொழுதார். அதனால் அவர் வெற்றி பெற்றார்; அவர் லட்சியம் வென்றது. முத்திநாதன் கத்தியால் குத்தியவுடனே மெய்ப்பொருள் நாயனார் இறந்துவிடவில்லை. கத்தி அவர் மார்பிலே இருக்கிறது. புற உடம்பு துடிக்கிறது. ‘வஞ்சனைக்காரன் குத்திவிட்டான் பார்!’ என்று துடிக்கிறது மனம். கத்தியால் முத்தி நாதன் குத்தியபோது புறத்திலே அவன் தாங்கி நின்ற சிவனடியாரின் தவவேடம் கலையவில்லை. அது அப்படியேதான் இருந்தது. மெய்ப்பொருள் நாயனார் கை கூப்பியது எதற்காக? அந்தத் தவ வேடத்திற்காகத் தான். அந்த வேடம் கலையாமல் அப்படியே இருக்கும்போது கூப்பிய அவரது கை, வாள் எடுத்து அவனோடு போராடலாமா? போராட வேண்டும் என்றது புறச் சரீர அபிமானம். 'கூடாது. மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் என்று நீ வாழ்வதனால் தானே மெய்ப்பொருள் நாயனார் என்கிற புகழையும் பெற்றாய்? அத்தவவேடம் அப்படியே உள்ளது. ஆகவே கூப்பிய கை பிரியக் கூடாது' என்றது பலகாலமாகக் கடைப்பிடித்து வரும் கொள்கை அபிமானம். இரண்டுக்கும் நடந்த போரின் முடிவு என்ன? கொள்கையின் வெற்றி மெய்ப்பொருள் நாயனார் முத்திநாதன் குத்திய செயலை மாத்திரம் பார்த்து, அவன் பூண்டிருக்கும் வேடத்தை மறக்க i8O