பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்க்கு நல்ல பெருமாள் பலவகைப்பட்ட தொழில், பலவகைப்பட்ட ஆசாரங்கள், பலவகைப் பட்ட பழக்கங்கள் உடைய மக்கள் சேர்ந்ததே சமுதாயம். உடம் பிலுள்ள உறுப்புக்கள் ஒன்றுக்கொன்று வேறுபாடாக இருக்கின்றன என்றாலும், அவை அவை அவ்வவற்றுக்குரிய செயலைத் திறம்படச் செய்து நன்றாக இருந்தால்தான் அவ்வுறுப்புக்களை உடைய மனிதன் நன்றாக வாழ்வான். அதைப்போல ஒருவருக் கொருவர் வேறுபடும் மக்கள் ஒரு சமுதாயத்தில் இருந்தாலும், அந்தச் சமுதாயம் நன்றாக வாழ அவரவர்கள் அவரவர்களுக்கு உரிய காரியங்களைத் திறம்படச் செய்ய வேண்டும். 'வேற்றுமை யில் ஒற்றுமை' (Unity in diversity) என்பது இதுதான். வேறுபட்ட இவர்கள் எல்லோருடைய காரியங்களிலும் கட்டுப்பாடும் ஒற்றுமையும் நிலவினால்தான் சமுதாயம் நன்றாக இருக்கும்; வைய வாழ்வு இனிக்கும். வைய வாழ்வு நன்றாக அமைய வேண்டுமானால் நம் உடம்பு நன்றாக இருப்பது போதுமா? நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக இருக்கவேண்டும். 'குழந்தைக்கு உடம்பு சரியில்லை; மனைவிக்கு நோய் வந்திருக்கிறது' என்றால் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியாது. ஆகவே நம்மைச் சுற்றிச் சூழ இருக்கிறவர்களும் நன்றாக வாழ்ந்தால்தான் நாமும் இன்பமாக இருக்க முடியும். இதுவரையில் நாம் ஒருவாறு உணர்கிறோம். இந்த முறையில் மேலும் அன்புடன் சிந்திப்போமானால் நாம் வாழ்கின்ற ஊர் நன்றாக இருக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். பிறகு அந்த ஊர் உள்ள நாடு, அந்த நாடு திகழ்கின்ற தேசம், அந்தத் தேசம் அடங்கிய உலகம் எல்லாம் நன்றாக வாழவேண்டுமென்ற எண்ணம் வரும்; இவ்வுலகத்தில் வசிக்கும் உயிர்கள் எல்லாம் நன்றாக வாழவேண்டுமென்ற எண்ணமும் வரும். இப்படித் தன்னில் இருந்து ஆரம்பித்து, விரிந்து பரந்த உலகம் முழுவதும் நன்றாக வாழ வேண்டுமென்ற எண்ணம் வரவேண்டுமானால், நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமென்று முதலில் தோன்றிய அன்பு வளர்ந்து வளர்ந்து முதிரவேண்டும். வேறுபாடற்ற காட்சி அகன்ற உலகத்தை ஒரே சமுதாயமாக, வேறுபாடு இல்லாத சமுதாயமாகக் கண்ட ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள் நம் 9