பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 கொண்டு தொழுத மெய்ப்பொருள் நாயனார் அவன் தம்மைக் கத்தியால் குத்தியபோதும் வேடத்தைத் தொழுதபடியே நின்றார். அவர் மனம் கத்திக்குத்தின் துன்பத்தை அறியாமல் மரத்துப் போயிற்று; இது நடக்கும் என்று தோற்றவில்லையா? அவர்களுக்கு அவரவர்களுடைய அளவிலே சரீர அபிமானம் போய்விட்டது. கீறிய காயத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பது சாமானிய நிலை. மார்பிலே வேல்பட்ட நோவை உணராது இருப்பது அதையும் விடச் சிறந்த நிலை. வஞ்சகன் மார்பிலே கத்தியைச் செருகிய போதும் அவன் தவவேடம் கண்டு தொழுத கை பிரிக்காது நின்ற மெய்ப்பொருள் நாயனாரது நிலை மிகவும் உயர்ந்தது. இறைவன் திருவருளைச் சிந்தித்து வாழ்வார்களுக்கு இத்தகைய நிலை வரும. மெல்ல மெல்ல அது மெல்ல மெல்லப் பழகிப் பழகி வரவேண்டும். பக்கத்தில் நிற்பவனுடைய கால் தவறிப்போய் நம்மேல் பட்டு விட்டால் நமக்குக் கடுமையான கோபம் வருகிறது. நம்முடைய வீட்டுக் குழந்தையின் கால் நம்மேல் பட்டால் கோபம் வரு கிறதா? குழந்தை உதைக்கிறது என்று சொல்லி அதன்மேல் ஆத்திரம் கொள்கிறோமா? பிறருடைய கால் நம் உடம்பின் மேல்படுவது இரண்டிடத்தும் பொதுவாக இருக்கிறது. அதை உதையாகவும் பார்க்கலாம்; ஸ்பரிசமாகவும் பார்க்கலாம். இந்த இரண்டு வகையில், நாம் பார்ப்பது நம்முடைய மனோ பாவத்தைப் பொறுத்திருக்கிறது. நம்முடைய பாவம் தவறாக இருந்தால் தவறாகத்தான் பார்ப்போம். நம்முடைய பாவத்திலே அபிமானம் நிறைந்து இருந்தால் அபிமானம் நிறைந்த தாய் உள்ளத்தோடு அன்பாகவே பார்ப்போம். இப்படியே உலக இயலில் எம்பெருமானிடத்தில் அபி மானம் வைத்துவிட்டால் எல்லாவற்றையும் நல்லனவாகவே உணருகின்ற நிலையும், எல்லோருக்கும் நல்லனவற்றையே செய் கின்ற ஆற்றலும் அடைந்துவிடலாம். பிறரிடத்தில் வைக்கும் அன்பு இறைவன்பால் உள்ள பக்தியால் வளரும். எல்லோரிட மும் அன்பு வைத்தால் நம் சரீர அபிமானம் மெல்ல மெல்லக் கழன்று போகும். 1832