பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 ஒன்றாக இருக்கும் என்றோ, இருக்க வேண்டுமென்றோ சொல்ல முடியாது. சேருகிற இடம் ஒன்றாக இருந்தாலும் அவரவர்கள் இருக்கிற இடம் வேறு பட்டிருப்பதால் அதற்குத் தக்கபடி வழியும் மாறும். மயிலாப்பூரில் உள்ளவன் மவுண்ட்ரோடு போக வடக்கே போகிறான். திருவொற்றியூரில் உள்ளவன் தெற்கேதான் வர வேண்டும். தெற்கே வருபவனுக்கும், வடக்கே வருபவனுக்கும் வழி வேறாக இருந்தாலும் இருவருக்கும் லட்சியமாகிய மவுண்ட் ரோடு வந்துவிட்டால் இருவரும் தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு விடுகிறார்கள். இப்படி வெளிவட்டத்தில் இருக்கும் போது பல பல சமய நெறிகளில் வேறுபாடு காண்கிறவர்கள் மையப்புள்ளியாகிய, லட்சியப் பொருளாகிய, ஆண்டவனுடைய திருத்தாள் அடியிலே வந்து சேர்ந்தவுடன் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்ட நிலையை அடைகிறார்கள். எந்த நாட்டைச் சேர்ந்த வர்களாக இருந்தாலும், எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த ஆசாரத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் ஆண்டவனுடைய திருத்தாளை அடைந்த ஞானிகளிடத்தில் எவ்வித வேற்றுமையையும் காண இயலாது. லட்சியத்திற்கு மாறான வழியில் செல்கிறவர்கள் வேறுபாட்டிலேதான் இருக்க வேண்டுமே தவிர, ஒன்று சேரவே இயலாது. உலக வாழ்க்கை யில் சரீர சம்பந்தமான சுகத்தையே நோக்கமாகக் கொண்டவர்கள் அந்த நோக்கத்தால், விருப்பு வெறுப்பு உடையவர்களாகிறார்கள்; அதனால் பலவிதமான தொல்லைகளைப் பெற்று அமைதியின்றி வாழ்கிறார்கள். கடவுள் என்ற லட்சியத்தை மையப் புள்ளியாகக் கொண்டு உலக வாழ்க்கையில் யாத்திரை செய்கிறவர்களுக்கோ நம்மைப் போல எத்தனையோ தொல்லைகள் இருந்தும் அமைதி யாக, எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். இதற்குக் காரணம் என்ன? அவர்களுக்கு மையப் புள்ளி தெரிந்து விட்டது. இடை யிலுள்ள துன்பங்களை அவர்கள் மனம் உணர்ந்தும் உணராதது போன்று மரத்துப் போய்விடுகிறது. குசேலர் பண்பு நமக்கு இரண்டு குழந்தைகள் இருந்தாலேயே நாம் படு கின்ற தொல்லைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. குசேலருக்கு 184