பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்காத் தலை இருபத்தேழு குழந்தைகள். இருப்பினும் அவர் ஏதாவது துன்பம் அடைந்தாரா? இன்னல் இல்லாமலா இருந்திருக்கும்? ஆனால் அவர் ஆண்டவன் என்ற லட்சியத்தைக் கொண்ட ஞானி; ஆத லால் அதிலே முறுகிய காதலை உடைய அவர் மனம் இவற்றை எல்லாம் உணராமல் மரத்துப் போய்விட்டது. இப்படிச் சரீர அபிமானம் போக வேண்டுமானால் இறை வனுடைய திருவடியாகிய வீட்டை அடையும் ஆர்வம் மிக வேண்டும். முருகன் அத்தகைய பண்பை நல்ல வழியில் செல்லும் பான்மையை, நமக்கு அருள்வானாம். அப்படி அவன் பலருக்கு நற்பண்புகளைக் காட்டி ஆட்கொண்டிருக்கிறான். குருவாக உபதேசம் செய்து நல்ல குணங்களைக் காட்டி ஆட் கொண்டருளியிருக்கிறான். நிணம்காட்டும் கொட்டிலை விட்டுஒரு வீடுஎய்தி நிற்கநிற்கும் குணம்காட்டி ஆண்ட குருதேசிகன். 2 உயிர் சுகமாக இருக்க வேண்டுமானால் நல்ல வீட்டில் அது வாழ வேண்டும். இப்போது அது இந்த உடம்பாகிய சிறு கொட்டிலில் வாழ்கிறது. உடம்பு வெறும் ஊன்குவை, நிணப் பிழம்பு. இது நிணங்காட்டும் கொட்டில். இதை விட மனம் இல்லாமல் இதைப் பற்றிக் கொண்டு அளவற்ற அபிமானம் வைத்து வாழ்கிறோம். உடம்பின்மேல் பற்று உடம்புக்கு எந்தவிதமான கோளாறும் வரக்கூடாது என்று வேளை வேளையில் சாப்பிடுகிறோம்; நோய் வராமல் இருக்க மாத்திரைகளை விழுங்குகிறோம். தலை வலித்தால் போதும்; உடனே டாக்டரிடம் ஒடிக் காட்டுகிறோம்; அவர் ஊசியால் குத்தினாலும் சகித்துக் கொள்கிறோம்; கசப்பு மருந்தைக் கொடுத் தாலும் உட்கொள்கிறோம். இவையெல்லாம் எதற்காக? உடம் பிலுள்ள நிணத்தைக் காப்பதற்காக; பெருக்கிக் கொள்வதற்காக. நமக்கு உள்ள பொழுதில் நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது 185