பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 நாட்டில். 'பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே' என்று அன்பினால் குழைந்து பாடியிருக்கிறார் தாயுமானவர். அவருக்கு எல்லாம் இறை மயமாகத் தோன்றின. 'காக்கை குருவி எங்கள் சாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்கும் திசையெ லாம்நாம் அன்றி - வேறில்லை நோக்க நோக்கக்களி யாட்டம்' என்று பாடுகிறார் பாரதியார். பாரதியார் கண்ட வேறுபாடற்ற சமுதாயத்தில் காக்கை குருவி ஆகிய சிற்றுயிர்கள் மாத்திரம் இடம் பெறவில்லை. உயிர் அற்ற ஜடப் பொருள்களான மலை யும், கடலும்கூட அவரது கூட்டத்தோடு சேர்ந்துவிடுகின்றன. ஒன்றுக்கு ஒன்று வேறுபடுத்திப் பார்த்துத் துன்புறுத்தி, தாமும் துன்புற்று வாழ்கின்ற மக்களுக்கு அத்தகைய மனப்பான்மை வரவேண்டுமானால் கடவுள் உணர்வு வரவேண்டும். உயிருக்கு உயிர் உடம்பில் உறுப்புக்கள் எல்லாம் சேர்ந்திருந்தால் அது பயன் உடையதாகும் என்று சொல்ல முடியாது. அந்த உறுப்புக்கள் எல்லாம் கட்டுப்பட்டு, ஒற்றுமையாக ஒரு காரியத்தைச் செய்யும் படி செய்யும் உயிர் அந்த உடம்பில் இருக்கவேண்டும். உயிர் இல்லாத உடம்பிலும் உறுப்புக்கள் இருக்கின்றன; ஆனால் அவற்றால் பயன் இல்லை. உறுப்புக்களை இயக்க உடம்பில் உயிர் இருக்க வேண்டும். அதுபோலவே, உயிர் இயங்குவதற்கும், உயிருக்கு உயிராக ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? அதைத் தான் பரமாத்மா, கடவுள் என்று சொல்கிறார்கள். கடவுள் என்ற புள்ளியை மையமாகக் கொண்டு விரிகின்ற சமுதாய வட்டத்தில் எல்லா உயிர்களும் உள்ளன. எல்லா உயிர்களையும் அடக்கும் வட்டத்தின் மையப் புள்ளியாகிய ஆண்டவனை நோக்கிச் செல் கின்ற உயிர்கள் வேறுபாடு அற்று ஓர் இடத்தில் வந்து நிற்கும். சூழ்நிலையும் கோயிலும் இப்படி எல்லா உயிர்களுக்கும் மையமாக இருக்கிற ஆண்ட வனைப் புராணங்கள், சிவலோகவாசி என்றும், வைகுண்டவாசி என்றும் உரைக்கின்றன. நமக்கு எட்டாத இடங்கள் அவை. 1O