பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 இன்பத்தைச் சொன்னார்; பின்பகுதியிலே அது பெறாதவன் நிலையிலே நின்று பாடினார். ஒரே நூலில் வெவ்வேறு பாட்டில் வெவ்வேறு நிலை பொருந்தும் என்றால், ஒரே பாட்டில் வெவ் வேறு பகுதியிலும் வெவ்வேறு பொருந்தும் என்று கொள்ளலாம் அல்லவா? ஆனால் இதில் அருணகிரிநாதர் தப்புவதற்கு ஒரு வழி இருக்கிறது. நிணம்காட்டும் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிற்கும் குணம்காட்டி ஆண்ட குருதேசிகன் என்பதில் இன்னாரை ஆண்ட என்று குறிக்கவில்லை. 'முன்பு இருந்த பல அன்பர்களை ஆண்டிருக்கிறான். அதை நினைந்து தான் சொன்னேன்" என்று கூறி அவர் தப்பிக் கொள்ளலாம் அல்லவா? இனி நமக்காக அவர் வருந்திக் கூறுவதைப் பார்க்கலாம். 4 குமரன் பதாம்புயத்தை வணங்காத் தலைவந்தி தெங்கே எனக்கிங்ங்ன் வாய்த்ததுவே? முருகனுடைய திருவடி தாமரை போல இருக்கிறது. நல்ல பூவைத் தலையிலே சூட்டிக் கொள்வார்கள். முருகனுடைய பதாம்புயத்தை நாம் தலையிலே வைத்துக் கொள்ள வேண்டும். அது உள்ள இடம் தேடிச் சென்று அதன்மீது நம் தலை படும்படி வணங்க வேண்டும். நாம் அப்படிச் செய்வதில்லை. உத்தமாங்கம் இந்த உடம்புக்குள் எல்லா அங்கங்களையும்விட உயர்ந்த தாக விளங்குவது தலை. அதனால் உத்தமாங்கம் என்ற பெயர் அதற்கு வந்திருக்கிறது. அது இறைவனை வணங்கும் தன்மை உடையதாக இருந்தால் உத்தமாங்கந்தான். மூளை தலையிலே இருப்பதனாலே அது உயர்ந்து விடவில்லை. அந்த மூளையினால் தான் செருக்கு உண்டாகிறது. உடம்பில் உள்ள ஐந்து பொறிகளில் 192