பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்காத் தலை நான்கு பொறிகள் தலையில் இருப்பதனாலே அது உயர்ந்து விடவில்லை. விலங்குகளுக்கும் அவ்வாறே இருக்கின்றன. பின் தலை உயர்வு பெறுவதற்குக் காரணம் அது எம்பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி ஆன்மாவுக்கு விடுதலை தேடித் தருவதே. - வணங்காத தலை எம்பெருமான் சந்நிதானத்திலே வணங்காது நிமிர்ந்து நிற்கின்ற தலை என்ன பண்ணும்? இராமலிங்க சுவாமிகள் சொல்லுகிறார். "எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை இகழ்விறகு எடுக்கும் தலை” விறகுக் கட்டைச் சுமக்கும் தலையாம் அது. விறகுக் கட்டையைத் தூக்கி வைத்துக் கொண்டவன் தலை வணங்க முடியாமல் நிமிர்ந்தே இருக்கும். எத்தகைய விறகு இகழ் விறகு என்கிறார். கல்யாணத்திற்கு விறகு வேண்டும். தினப்படி உபயோகத்திற்கும் விறகு வேண்டியிருக்கிறது. ஆகையால் விறகு தூக்கி வருகிறவர்களைக் கண்டு யாரும் இகழ மாட்டார்கள்; அருவருப்படைய மாட்டார்கள். முருகன் திருவடியிலே தலை வணங்காது இருப்பவன் கல்யாணத்திற்கு விறகு வெட்டி வருகிறவனாகக்கூடப் பிறக்க மாட்டான். பிணத்தைச் சுடுவதற்குப் பயன்படும் விறகைச் சுமந்து வருபவனாகத்தான் பிறப்பான். அவன் எதிரே வரும்போது மக்கள் ஒதுங்கி நடப்பார்கள்; அரு வருப்படைவார்கள். முருகனை வணங்காத தலை பிணத்துக்கு விறகு சுமக்கும் தலையாகி விடுமாம். “எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை இகழ்விறகு எடுக்கும் தலை.' வணங்குகின்ற தலைதான் வளைந்த வில்போன்று வீரம் உடையதாக இருக்கும். நம் தலை எம்பெருமானின் சந்நிதானத் தில் வளைந்தால் பயன் உண்டு. வளையாது நிமிர்ந்திருக்கிறோம். முருகனுடைய பதாம்புயத்திலே வணங்காத தலை நமக்கு இருக்கிறது. இதை நாம் உணர்ந்து வருந்தத் தெரியாவிட்டாலும் நமக்காக அருணகிரியார் வருந்துகிறார். "ஐயோ! ஆண்டவனுடைய சந்நிதானத்தில் வணங்காத இந்தத் தலை வந்து எனக்கு வாய்த் 193