பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 திருக்கிறதே!" என்று சொல்லித் தலையில் அடித்துக் கொள்வது போல இதைப் பாடுகிறார். குமரன் பதாம்புயத்தை வணங்காத் தலை வந்து இதுஎங்கே எனக்கு இங்ங்ன் வாய்த்ததுவே 'குமரேசனுடைய பாதத் தாமரைகளை வணங்க வேண்டும். அதுதான் தலையினால் உண்டான பயன்' என்ற கருத்தை இதன் வாயிலாக அவர் உணர்த்துகிறார். பிறர் கருத்து 'கோள்இல் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை' என்று வள்ளுவரும் கூறினார். ஆண்டவன் தாளும் அடியவர் தலையும் இணைய வேண்டும். தலை அதற்காகவே இருக்கிறது. 'வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து" என்று மணிவாசகரும், 'வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை' 'தலையே நீவணங்காய்' என்று அப்ப முனிவரும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்கள். ★ நிணம்காட்டும் கொட்டிலை விட்டுஒரு வீடுஎய்தி நிற்கநிற்கும் குணம்காட்டி ஆண்ட குருதே சிகன்,அம் குறச்சிறுமான் பணம்காட்டும் அல்குற்கு உருகும் குமரன் பதாம்புயத்தை வணங்காத தலைவந்துஇது எங்கே எனக்குஇங்ங்ன் வாய்த்ததுவே? (ஊனைக் காட்டுகிற மாட்டுக் கொட்டிலைப் போன்ற உடலை விட்டு ஒப்பற்ற மோட்சம் என்னும் வீட்டை அடைந்து அங்கே நிலையாக இருப்பதற்கு ஏற்றபடி நல்ல நெறியிலே நிற்கும் பண்பைக் காட்டி i54