பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்காத் தலை ஆட்கொண்ட குருபரனும், அழகிய குறமகளாகிய சிறிய மானைப் போன்ற வள்ளியின் பாம்புப் படம் போன்ற இரகசிய உறுப்புக்காக உருகும் குமாரனுமாகிய முருகனுடைய திருவடியாகிய தாமரையை வணங்காத தலையாகிய இது எங்கே எனக்கு இப்படி வந்து வாய்த்தது? நிணம் - ஊன். கொட்டில் - மாட்டுக் கொட்டகை. பணம் - பாம்பின் படம். வந்து என்பதை இங்ங்ன் வந்து என்று கூட்டுக. பொருள் கருதாமல் வந்த சொல் என்றும் கொள்ளலாம். 'அங்கே வைத்துப் பார்த்தேன்' என்ற வழக்கில் வைத்து என்ற சொல்லைப் போன்றது அது.)