பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவியாக் கரங்கள் 1 உடம்பைப் பெற்றதன் பயன் உடம்பினுள் இருக்கிற ஆண்டவனை வணங்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் நாம் உலக இயலில் ஈடுபட்டிருக்கிறோம். இறைவனை வணங்க வில்லையே என்று நாம் வருந்துவதற்குப் பதிலாக, 'வணங்காத தலைவந்து இது எங்க்ே எனக்கு இங்ங்ன் வாய்த்ததுவே" என்று அருணகிரிநாதர் நமக்காக வருந்தியதைப் போன பாட்டில் பார்த்தோம். தலைமாத்திரம் வணங்கவில்லையென்று சொன்னால் போதாது. மேலும் சில உறுப்புக்கள் இன்ன இன்ன காரியங்களைச் செய்ய வில்லை என்பதைத் தொடர்ந்து சொல்கிறார். கையின் சிறப்பு கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் என்று சொல்லும் எல்லாவற்றாலும் இறைவனை வழிபடவேண்டும்; உடம்பில் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும் கை, கால், வாய், எருவாய், கருவாய் ஆகிய கர்மேந்திரி யங்கள் ஐந்தும் உள்ளன. ஞானேந்திரியங்களுக்குள் கண் சிறந்தது. கர்மேந்திரியங்களுக்குள் கை சிறந்தது. கை செய்கைக்கு அறி குறியாக இருக்கிறது. ஒரு காரியத்தை நன்கு செய்பவனைக் கையால் ஆகிறவன் என்றும், செய்ய முடியாதவனைக் கையால் ஆகாதவன் என்றும் சொல்கிறோம். ஐந்து பேர்கள் ஒரு மைல் தூரம் நடந்து போவது என்று தீர்மானித்துக் கொண்டு புறப்படுகிறார்கள். ஒருவன் இரண்டு பர்லாங்கு போவதற்குள், "அப்பா என்னால் நடக்க முடியவில்லை"