பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்க்கு நல்ல பெருமாள் அவ்விடங்களில் மட்டும் இருக்கிறான் என்று சொல்வதில்லை. அவன் எங்கும் இருக்கிறான் என்றும் சொல்கின்றன. நமக்குச் சிவலோகத்தில் அவன் இருப்பதும் தெரியாது; எங்கும் பரந்திருப்பதும் தெரியாது. ஆயினும் அவன் நினைவு வரவேண்டும் என்பதற்காகக் கோயிலை அமைத்திருக்கிறார்கள். கோயிலிலேதான் அவனை நினைக்க வேண்டும் என்பது இல்லை. மடைப்பள்ளி என்றால் உணவு நினைவு வருகிறது. மடைப்பள்ளி அல்லாத இடங்களில் உணவு நினைவு வருவதில்லையா? படிப்பு அறைக்குள் நுழைகிறவன் அங்கே படுத்துத் தூங்க முடியாதா? முடியும். இருந்தாலும் படிப்பு அறைக்குள் படிப்பதற்கு வேண்டிய புத்தகம், விளக்கு, மேஜை, நாற்காலி முதலிய எல்லா வசதிகளும் இருப்பதாலும் அவ்வறைக்குள் பெரும்பாலான நேரம் படிப்பி லேயே கழிவதாலும் அவ்வறைக்குப் படிப்பறை எனப் பெயர் வைத்தார்கள். அவ்வறையிலுள்ள சூழ்நிலையே நம்மைப் படிக்கத் தூண்டுகிறது. கோயில்கள் அத்தகையவை. கோயில்களில் யாரும் அக்கிரமங்கள் செய்வதில்லை என்று சொல்ல இயலாது. கோயி லுக்குப் போகின்ற பெரும்பாலனவர்களுக்கு அங்கே ஆண்டவனை நினைக்கத்தக்க சூழ்நிலை இருக்கிறது. ஆலயத்திற்கு போகும் போதே அகண்ட வியாபியாய் இருக்கும் இறைவனுடைய நினைப்பு உண்டாகிறது. உள்ளும் புறம்பும் துன்பத்தில் தவிப்பவனுக்கு, துன்பத்தில் ஆழ்ந்த வேறு ஒருவன் எப்படி உதவி செய்ய முடியும்? சிறையில் அடை பட்டிருக்கிறவனை, அவனைப் போலவே சிறையில் அடை பட்டிருக்கிற வேறு ஒருவன் எப்படி விடுதலை செய்ய முடியும்? சிறையில் அடைபடாது தனித்து வெளியில் இருக்கும் ஒருவன் தான் பூட்டைத் திறந்து வெளிவிட முடியும். பிரபஞ்சச் சேற்றுக்குள் அகப்பட்டிருக்கும் உயிர்களைக் காப்பாற்ற, பிரபஞ்சச் சேற்றுக் குள்ளேயே கிடக்கும் மற்றோர் உயிரால் முடியாது. ஆதலால், 'நம்மைக் காப்பாற்றும் ஆண்டவன் நம்மிலும் அப்பாற்பட்டு இருக்கிறான். இந்த பிரபஞ்ச எல்லையைக் கடந்தவனாக இருக்கிறான்' எனச் சொன்னார்கள், நம் பெரி யோர்கள். அப்பாற்பட்ட நிலையில் இருக்கும். ஆண்டவனைப் 量士