பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவியாக் கரங்கள் 2 கர்மேந்திரியங்களுக்குள் சிறந்தது கை. அது இறைவனை வணங்குவதில் ஈடுபடவில்லையே என்று அருணகிரிநாதர் வருந்து கிறார். 'என்னுடைய கை நன்றாக இருக்கிறது. ஆனாலும் அது உன்னைக் கும்பிடவில்லை. அஞ்ஞானத்தினாலே உன்னைப் போற்றிக் குவியாத கரங்கள் எங்கே வந்து எனக்கு இப்படி வாய்த்தன!” என்று அவர் இரங்குகிறார். அதற்கு முன்பு அவர் சொல்லும் வரலாறுகள் அவரது சமரச மனோபாவத்தைக் காட்டு கின்றன. அருணகிரிநாதரிடம் சென்று, 'சுவாமி, வாழ்வில் உய்வு பெறுவதற்கு யாரோ ஒருவருடைய தாளில் வணங்கவேண்டும், அன்பால் கை கூப்பி அவரைப் போற்ற வேண்டும் என்று சொன்னீர்களே. அந்தப் பெருமான் யார்? அவரை எங்கே காண லாம்? அவரிடம் என்னை அழைத்துக் கொண்டு போகிறீர்களா?” என்று ஒருவன் கேட்பதாக வைத்துக் கொள்வோம். அருணகிரியார் அவனை அழைத்துக் கொண்டு முருகப் பெருமானுடைய திருமாளிகைக்குப் போகிறார். இனி நடப்ப வற்றைச் சற்றே கற்பனை செய்து பார்க்கலாம். கடல் அடைத்தோன் குறிப்பிட்ட வீட்டிற்குள் நுழையும்போதே திண்ணையில் ஒருவர் படுத்துக் கொண்டிருக்கிறதைப் பார்க்கிறார்கள். உடன் வந்தவன் அவரே தாம் பார்க்கவந்த கடவுள் என்று எண்ணி விவரம் தெரிந்துகொள்ள அருணகிரியார் பக்கம் திரும்புகிறான். அப்போது அவர் சொல்கிறார்; - கவியால் கடல் அடைத்தோன், 'முருகப் பெருமானுடைய மாமனாராகிய திருமால் அப்பா இவர். பத்து விதமான அவதாரங்கள் எடுத்துக் களைத்துப் போய் மாப்பிள்ளையின் வீட்டுத் திண்ணையில் வந்து படுத்திருக்கிறார். இவர் எடுத்த அவதாரங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தால் நேரம் பிடிக்கும். ஒன்று மாத்திரம் சொல்கிறேன். இராமாவதாரத்தில் இவர் செய்த அற்புதத்தைச் சற்றுக் கேள். சீதா 2O1