பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவியாக் கரங்கள் கை குவிவது? நம்முடைய கரங்கள் குவியாமல் விரிந்திருக் கின்றன. அதனால் ஆசை மிகுந்து பல செயல்களைப் புரிந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆகவே சிவபெருமானை அறிமுகம் செய்து வைக்கும் அருணகிரியார், "நஞ்சு கக்கும் நாகத்தைப் பகையுணர்ச்சி அடங்கி இருக்கும் படி ஆபரணமாகச் சூட்டிக் கொண்டவர் இவர் என்று அடையாளம் காட்டுகிறார். பகை நீங்குதல் இறைவனுடைய திருவருள் இருக்கும் இடத்தில் பகையாக இருக்கும் பொருள்கள் எல்லாம் பகை நீங்கி ஒன்றுபட்டு வாழ்கின்றன. உலகில் எல்லா உயிர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்றால் எம்பெருமானுடைய திருவருள் நினைவு வேண்டும். புலியும், மானும் பகையுணர்ச்சி நீங்கி ஓர் இடத்தில் நீர் குடிக்கின்றன என்று நல்ல மன்னர்களுடைய ஆட்சிக்கு ஒர் அடையாளம் சொல்வார்கள். ஆண்டவன் திருவருளைப் பலமாகக் கொண்ட மன்னர்கள் அறத்தை வளர்த்தார்கள். அந்த அற ஆட்சியிலே விலங்கினங்களும் பகை தீர்ந்து வாழ்ந்தன. 'புலிபோன்ற உருவத்தையும், மான் போன்ற உருவத்தையும் பக்கத்தில் வைத்தால் புலியும் மானும் ஓர் இடத்தில் இருப்பது போலத் தோன்றும். அல்லது உயிர் அற்ற மானும், உயிர் அற்ற புலியும் ஒர் இடத்தில் இருக்கலாம். உயிரோடு இருக்கும்போது அவை இரண்டும் பக்கத்தில் பக்கத்தில் எப்படி நிற்கும்?' என்று ஒரு கேள்வி எழலாம். பகைத் தன்மை உடைய விலங்குகள் பகை நீங்கி இருக்கின்ற செவ்வி பல உண்டு. இறைவனுடைய அருளி லேயே ஈடுபட்ட ஆனாய நாயனார் என்னும் பெரியவர் அத்தகைய அற்புதத்தைச் செய்தார். அது பெரிய புராணத்தில் வருகிறது. ஆனாய நாயனார் ஆனாய நாயனார் நீர்வளம், நில வளம் பொருந்திய சோழ நாட்டில் ஆயர் குலத்தில் தோன்றியவர், இறைவனிடத்தில் எல்லை இல்லாக் காதல் கொண்டு வாழ்ந்தவர். ஊரில் உள்ள கன்று காலிகளை ஒட்டிக் கொண்டு போய்த் தினந்தோறும் முல்லை நிலம் சென்று மேய்த்து வருவார். ஒவ்வொரு நாளும் அவர் மாடுகளை மேய்க்க அழைத்துச் செல்லும்போது அவ்விடத் 209