பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 'இத்தனை பெருமையுடைய மாமாவுக்கு மாப்பிள்ளை யாகவும், அப்பாவுக்குப் பிள்ளையாகவும் உள்ள அந்தக் குழந்தைப் பெருமான் எப்படி இருப்பார் சுவாமி அவருக்கு என்று தனிப் பெருமை ஏதாவது உண்டா?' என்று உடன் வந்தவன் அருணகிரி யாரைக் கேட்கிறான். அருணகிரியார் சொல்லத் தொடங்குகிறார். திறல் அரக்கர் புவியார்ப்பெழத்தொட்ட போர்வேல் முருகனை. முருகப் பெருமானுடைய வீரத்தைச் சொல்கிறார், முருகப் பெருமான் தன் திருக்கரத்தில் வேல் தாங்கி இருக்கிறான். அந்த வேல் ஞானம். நல்லவற்றையும், நல்லவர்களையும் குலைப்பதையே தம் வேலையாகக் கொண்டவர் அசுரர். அவர்கள் முருகன் திரு அவதாரம் செய்த காலத்திலேயே, "ஐயோ! இனி நாம் ஒழிந்து போவோம்!' என்று அழ ஆரம்பித்துவிட்டார்கள். 'கடல்அழக் குன்றுஅழச் சூர்அழ விம்மி அழும் குருந்தைக் குறிஞ்சிக் கிழவன்என்று ஒதும் குவலயமே’. முருகப் பெருமான் குழந்தைப் பிராயத்தில் அறுவர் பாலுக்கு ஆசைப்பட்டு விம்மி அழுதான். அந்த அழுகை கேட்ட அசுரர்கள் அவன் எப்போது நம்மேல் போர் தொடுக்க வேலைத் தொடு வானோ என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக் கிறார்கள். அவர்கள் மெலிந்தவர்கள் அல்ல. மிக்க வீரம் பொருந் தியவர்கள். அசுரர் பலம் திறல் அரக்கர் நெஞ்சில் ஈரம் இல்லாத வீரம் உள்ள திறல் அரக்கர்; நன்மையைக் குலைக்கின்றவர்கள். நல்லவர்களுக்குத் துன்பம் விளைத்து, அவர்கள் அழக்கண்டு களிக்கும் இயல்பு உடையவர்கள். அவர்களைக் குலைப்பதற்கு முருகன் வேலைத் தொட்டான். தொடுதல் என்ற சொல்லுக்கு ஏவுதல் என்றும் உபயோகித்தல் என்றும் பொருள் உண்டு. ஆனால் இங்கே தீண்டுதல் என்று 212