பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவியாக் கரங்கள் முன்னால் போய் நின்று கையைக் குவிக்கிறார்கள். இறைவனுடைய சந்நிதானத்திலும் அவர்கள் கை குவிப்பது உண்டு; "சுவாமி, என் பெட்டியில் நிறைய வோட்டுக்கள் விழ வேண்டும்' என்று வேண்டிக் கொண்டு குவிக்கிறார்கள். விரிகிற கை குவிவதற்குக் காரணம் நெஞ்சிலே ஆண்டவன்பால் கொண்ட காதல் அல்ல; வேறு ஒன்றிடத்தில் கொண்ட ஆசைதான். அன்பு இல்லாமல் கரங்கள் குவிந்தாலும், குவியாமலே இருந்தாலும் ஒன்றுதான். ஆகவே நம்முடைய கை ஆண்டவனுடைய சந்நிதானத்திலே குவிவதற்கு முன்னாலே கருத்து அன்பினாலே குவியவேண்டும். அதனை நினைந்தே, 'அன்பால் குவியாக் கரங்கள் என்றார் அருணகிரியார். கைகள் தாமே குவிதல் பரஞ்சோதி முனிவர் கைகள் அன்பினாலே தொழும் முறையை அழகாகச் சொல்கிறார். மாணிக்கவாசகருக்குக் கைகள் குவிந்தன. அவர் குவிக்கவில்லை; தாமாகக் குவிந்தன என்கிறார். அவர் மாணிக்கவாசகர் துதியைச் சொல்லும்போது இந்தக் கருத்தை வெளியிடுகிறார். மணிவாசகருக்கு வணக்கம் என்று அவர் சொல்லவில்லை. அவர் வீட்டில் ஒருவன் வேலை செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய வீடு தேடிச் சொன்று, 'அப்பா உனக்கு ஒரு கும்பிடு' என்று அவன் காலில் விழுகிறார். "சுவாமி, என் காலில் விழுவதற்கு நான் என்ன பெரியவனா?” என்று அவன் நடுங்குகிறான். "அப்படிச் சொல்லாதே. நீ யார் வீட்டில் வேலை செய்கிறாய் என்று எனக்குத் தெரியும். மணி வாசகர் வீட்டில் அல்லவா சேவகம் செய்கிறாய்? அவருக்குத் தொண்டு புரியும் பாக்கியம் பெற்ற நீ என்னைவிட எத்தனையோ உயர்ந்தவன் ஆயிற்றே!” என்று அவர் காலைப் பற்றிக் கொள்கிறார். “தொழுதகை தலைமீ தேறத் துளும்புகண் ணிருள் மூழ்கி அழுதடி யடைந்த வன்ப னடியவர்க் கடிமை செய்வாம்' என்கிறார். மணிவாசகர் எப்படி உயர்ந்தவர் என்பதை இந்தப் பாட்டில் தெளிவாகச் சொல்கிறார். மறைகள் தேறா இறைவனை இரவும் பகலும் பூசித்து இன்புற்றவர் மணிவாசகர். இறை வனுடைய திருவருளிலேயே ஈடுபட்டு அவன்பால் கொண்ட அன்பினாலேயே அவர் கைகள் தாமாகக் குவிகின்றன. க.சொ.111-15 215