பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த வீடும் அந்த விடும் முத்தன். இறைவன் இயல்பாகவே முத்தனாக இருக்கிறான். அவனைச் சார்ந்த உயிர்களும் எல்லாவிதமான பந்தத்தினின்றும் விடுபடுகின்றன. அற்புதமான உடம்பு உலகில் வாழும்போது பல வகை நுகர்ச்சிகளையும் அடைகிற இந்தப் புற உடலை இறைவன் மிக அற்புதமாகவும் மிக நுட்பமாகவும் படைத்திருக்கிறான். இந்த இயந்திரத்துக் குள்ளே எத்தனையோ சிறிய சிறிய உறுப்புக்கள் இருக்கின்றன. புதிய புதிய இயந்திரங்களை விஞ்ஞானிகள் படைக்கும்போது கண்டு வியந்து போற்றும் நாம் உடலாகிய அற்புத யந்திரத்தைப் பார்த்து மிக்க வியப்பை அடைவதில்லை. எளிதில் நம் முயற்சி இல்லாமலேயே இது கிடைத்திருப்பதுதான் காரணம். எங்கே பார்த்தாலும் இருப்பதனால் இதன் அருமை தோன்றுவதில்லை. மிக நுட்பமான பொருளைக் காட்டும் மைக்ராஸ்கோப்பைக் கண்டு வியக்கிறோம். தொலையிலுள்ள பொருளைக் காட்டு கின்ற டெலஸ்கோப்பைக் கண்டு வாயைப் பிளக்கிறோம். நம் கண்ணின் பெருமையை எண்ணிப் பாருங்கள். இதற்கு நுண் பொருளைக் காட்டும் கருவியையோ, தொலை பொருளைக் காட்டும் கருவியையோ ஒப்பிடலாமா? கண்ணால் பிற பொருளைப் பார்க்கிறோம் என்பது மாத்திரம் அல்ல. எதிரே இருப்பவர் களுக்கு நம் இருதயக் கருத்தை எடுத்துக் காட்டும் கண்ணாடியாக வேறு இருக்கிறது. 'ஐயா கண் சிவந்து இருக்கிறது; கோபமாக இருக்கிறார்' என்றும், 'நீர் வழிகிறது; துக்கம் போலிருக்கிறது” என்றும் தான் காட்டுகின்ற அடையாளத்தைக் கொண்டே உள்ளத்தின் உணர்ச்சியை உணர்ந்து கொள்ளக் கருவியாக அது விளங்குகிறது. இப்படி எதிரே உள்ளதைக் காணவும் உள்ளத்தில் உள்ளதைக் காட்டவும் பயன்படும் கண் போன்ற வேறு ஒர் இயந்திரத்தை மனிதனால் ஆக்க முடியுமா? அது கிடக்கட்டும். கைகளைப் பாருங்கள். நன்கு நீட்டவும் மடக்கவும் பொருள்களைப் பற்றி எடுக்கவும் விரல்கள் எத்தனை பொருத்தமாக அமைந்திருக்கின்றன! கைகளிலேயுள்ள ரேகைகள் சோதிடம் பார்ப்பதற்காக அமைந்தவை என்று சிலர் நினைக்க லாம். கை நன்றாக மடங்கி விரிய வேண்டுமானால் இடம் 219