பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த வீடும் அந்த விடும் இடம் வேறாகவும், கழிவுப் பொருளை வெளியேற்றுகின்ற இடம் வேறாகவும் இருக்கிறது. கழி பொருளை வெளியேற்றுவதற்கு மூலகாரணமாக இருக்கிற வாயு அபானன். அதோமுகமாக நோக்கும் வாயு அது. சாப்பிடுகிறோம்; நான்கு மணிநேரத்தில் ஜீரணம் ஆகி விடுகிறது. அப்படிச் செரிப்பதற்குத் துணையாக இருப்பது உஷ்ணவாயு; அதற்குச் சமானன் என்று பெயர். பேசுகின்றோம்; பேசுகின்ற காற்றும், மூச்சு விடுகிற காற்றும் ஒன்று அல்ல. பேசுகிற காற்று உந்தியிலிருந்து வருகிறது. அந்த வாயுவுக்கு உதானன் என்று பெயர். நரம்பிலே ரத்தம் ஒடிக் கொண்டிருக்கிறது. இருதயத்தில் இருந்து புறப்பட்ட ரத்தம் நரம்புகளின் வழியே ஒடி, திரும்பவும் இருதயத்திற்கு வந்து சேரும் வண்ணம் இயக்கும் வாயுவுக்கு வியானன் என்று பெயர். பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்ற இந்த ஐந்து வாயுக்களும் முக்கிய மானவை. இவற்றைப் பஞ்சப் பிராணன் என்றும் சொல்வார்கள். இந்த ஐந்து வாயுக்கள் அல்லாத வேறு ஐந்து வாயுக்களும் இருக்கின்றன. கை காலை நீட்டுகிறோம்; மடக்குகிறோம். அப்படிச் செய்ய உதவும் வாயுவுக்கு நாகன் என்று பெயர். கண்ணை மூடி மூடித் திறக்கிறோம். ஆமை தன் உறுப்புகளை வெளியே நீட்டி உள்ள்ே இழுத்துக் கொள்வதுபோல இந்தக் காரியம் நடைபெறுவதனால் இந்தச் செய்கைக்குத் துணையாக உள்ள வாயுவுக்குக் கூர்மன் என்று பெயர். கோபம் வருகிறது. ஓடினால் இரைக்கிறது. தும்முகிறோம். இந்தச் செய்கைகளுக்கு மூலமாக இருக்கும் வாயுவுக்குக் கிரிகரன் என்று பெயர். வியர்க்கிறது; இதற்குக் காரணமாக இருக்கும் வாயுவுக்குத் தேவதத்தன் என்று பெயர். உயிர் போனபிறகும், பிணத்தைக் கொளுத்தும் போதும் சில செயல்கள் நிகழ்கின்றன. கை, கால் கள் விறைக்கும்; தலைவெடிக்கும். கடைசியாகத் தலைவெடித்து வெளியேறும் வாயுக்குத் தனஞ்சயன் என்று பெயர். இப்படி உடம்பிலே பல செயல்கள் நிகழ்வதற்குக் காரணமாக இருப்பவை பத்து வாயுக்கள் என்று சாஸ்திர நூல்கள் கூறு கின்றன. உடம்பாகிய இந்த வீடு, பத்துக் கால்களில் சுமத்தி 225