பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 கொள்ள வேண்டும்" என்ற நினைப்புத் தோன்றுகிறது. அப்படி, இந்த உடம்பு நிலையானது, இந்திரிய சுகங்களே முக்கிய மானவை என்று எண்ணி வாழ்கின்ற மக்கள், இந்த உடம்பாகிய அகத்தை விரும்பாமல் நிலைத்த இன்ப வீட்டை, முத்தி வீட்டைப் பெறலாம் என்று நினைக்கும் பக்குவம் ஒன்று உண்டு. உடம்பிலுள்ள ஒவ்வொரு இந்திரியத்தையும் திருப்திப் படுத்த வேண்டுமென்று எண்ணிச் செய்த அத்தனை செய்கைகளும் தோற்றுப் போய், ஒவ்வொன்றின் ஆசைகளும் பன்மடங்காகப் பெருகி நிற்க, உடம்பு நலிந்து பல வகையாலும் துன்புறுகின்ற போது, 'உடம்பு பெற்றதே துன்பம்' என்கிற உணர்வு வருகிறது. 'இந்த உடம்பு எங்கே போனாலும் துக்கந்தான். இதிலும் எந்த உறுப்புக் கெட்டுப் போனாலும் போனது போனது தான். விடுதிச் சாமான் வாங்கிப் போட்டு இளமையுடையதாக ஆக்க முடியாது. இந்த வீட்டில் இருக்கிறபோதே சொந்தமாக வேறு ஒரு பாதுகாப்பு உள்ள வீட்டைக் கட்டிக் கொண்டால்தான் இந்த வீடு அழியும் போது, துன்பம் இல்லாத நிலையான ஆனந்தத்தை அளிக்கும் இடத்துக்குப் போக முடியும்' என்று உணர்ந்தார்கள் ஞானிகள். உடம்பாற் பயன் விரைவில் அழிகின்ற பொருள்களை வாங்கக் கூடாது. நன்றாக உழைக்கும் பொருளை அழிவில்லாத பொருளை வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம். கண்ணாடித் தம்ளர்களை வாங்குவதற்குப் பதிலாக எவர் சில்வர் தம்ளர்களை வாங்கி னால் நலம் என்று நினைக்கிறோம். இன்பத்தைப் பல காலம் அநுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற மனிதன், அந்த இன்ப நுகர்ச்சிக்குக் கருவியாகிய உடம்பு பல காலம் வாழ வேண்டும் என்ற ஆசையைக் கொள்கிறான். உடம்பு நெடுங் காலம் இராது என்பது அவனுக்குத் தெரியும். இருந்தும் மயங்கி, நிலையாத உடம்பை நிலைக்கப் பண்ணக் காயகல்ப மருந்தை உண்ணு கிறான். சித்தி படைத்த சாமியார் என்று யார் யாரையோ தேடிச் சென்று காலில் விழுகிறான். 'ஆசைக்கோர் அளவில்லை...நெடுநாள் இருந்த பேரும் நிலையாக வேஇனும் காயகல் பந்தேடி நெஞ்சுபுண் ணாவர்' என்று தாயுமானவர் பாடுகிறார். 228