பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி வீடு 1 பேய் பிடித்த வீடு சில காலத்திற்கு முன்னால் பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. ஒரு வீட்டில் கொடியில் உலர்த்தி இருந்த ஆடைகள் திடீரென்று எரிவதாகவும், கொடி மட்டும் எரியாமல் இருப்பதாக வும், யாரோ சூன்யம் வைத்தமையினால் அப்படி நடக்கிறதாக வும் அந்தச் செய்தி சொல்லியது. பேய், பிசாசு, பூதம் ஆகியவை ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் உற்பாதங்கள் நிகழும் என்று சொல்வார்கள். ஒருவனைப் பேய் பிடித்தால் அவன் எத்தனை சாப்பிட்டாலும் அவ்வளவும் ஒரு நொடியில் பஸ்மீகரம் ஆகிவிடும். வீட்டிலானாலும் உடம்பிலானாலும் பேயோ பூதமோ புகுந்துகொண்டால் அங்கே நிகழ்கின்ற நிகழ்ச்சிகளுக்கும் அவற்றை உடையவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இராது. அங்கே நிகழும் நிகழ்ச்சிகள் துன்பத்தைத் தருமே அல்லாமல் இன்பத்தைத் தருவது இல்லை. இப்படி எங்கோ அருமையாக நடக்கும் நிகழ்ச்சியைக் காண் கிறோம். ஆனால் ஒவ்வொரு நாளும் இத்தகைய நிகழ்ச்சி எல்லோரிடத்திலும் நடக்கிறது. அதை நாம் தெரிந்து கொள்வது இல்லை. எங்கேனும் அருமையாக ஒன்று நடந்தால் அதுதான் கண்ணில் படுகிறது; காதில் விழுகிறது. எங்கும் ஒரே மாதிரி இருந்தால் அதைப் பற்றி நாம் நினைக்க மாட்டோம். எல்லோரும் காலால் நடக்கும்போது யாரும் காலால் நடக்கிறார்களே என்று வியப்போடு பார்ப்பது இல்லை. ஆனால் நடக்கும்போது ஒருவன் கீழே விழுந்துவிட்டாலும் ஒருவன் கால் இல்லாமல் நொண்டியாக இருந்தாலும் அவனை நாம் கவனிக் கிறோம்; கண்டு எள்ளி நகையாடுகிறோம்; அவனைப் பற்றிப்