பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்க்கு நல்ல பெருமாள் அடையாளம் அவரைப்போல நாமும் இறைவனை உள்ளும் புறமும் கண்டு இன்ப அநுபவப் பேற்றை அடைய வேண்டுமென்றால் அவனிடத்தில் முறுகிய பக்தி வரவேண்டும். பக்தி ஏற்படுவதற்கு முதல் நிலை அவன் வடிவைப் பார்த்து, அவன் மேனியைத் தொட்டு அருச்சித்து வழிபட வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அவனை நினைவுபடுத்தும் சின்னமாக, அவனுக்கு உருவங்களை அமைத்து வைத்தனர் நம் பெரியோர். அவனை நமக்கு நினைப்பூட்டும் அடையாளங்கள் பல. கோயில் ஓர் அடையாளம். திருநீறு ஒர் அடையாளம். அவை எல்லாம் இறைவனை நினைவுபடுத்தும் சின்னங்கள். அவனது அருள் தத்துவங்களை நினைப்பூட்டுவன புராணங்கள். அவற்றின் உண்மைத் தத்துவங்களைப் புரிந்து கொள்ள முடியாமல், அவை யாவும் பொய், சரடு எனப் பேசுகின்ற அவல நிலை நம்மிடையே பரவுகின்றது. அடையாளமாகக் காண்கின்ற நிலையே, அநுபவ மாகக் காண்கின்ற நிலைக்கு வாசல். அநுபவமாகக் கண்டு இன்பப்பேற்றை எல்லா உயிர்களும் துய்க்க வேண்டு மென்ற பெருங்கருணையோடுதான் கோயில்கள் என்றும், மூர்த்திகள் என்றும் ஏற்பட்டன. ஒரு வடிவிலே இறைவனைப் பாவித்து, வழிபட்டு, மலரெடுத்து அருச்சித்துப் பக்தி செய்து வந்தால், பின்னர் அவனை அருச்சிப்பதற்காக எடுக்கும் மலரிலும் அவனைக் காணலாம்; பார்க்கின்ற பொருள்களில் எல்லாம் அவனைக் காண லாம். அது மாத்திரம் அல்ல. பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற அப்பரம்பொருளை நமது உள்ளமாகிய அகமலரிலும் கண்டு இன்புறலாம். தாயுமானவர் காட்டிய வழி இது. பல்வகை நெறி இவ்வுலகத்தில் யாவரும் உண்டு பசி தீர்கிறார்கள். ஆயினும் ஒருவன் அரிசி சாப்பிடுகிறான். வேறு ஒருவன் கோதுமை சாப்பிடுகிறான். மற்றொருவன் கம்பு சாப்பிடுகிறான். இப்படி உணவு வகையிலும் ஆசார வகைகளிலும் மாறுபாடு இருப்பது போலவே இறைவனுடைய அருளைப் பெறுவதற்கான மார்க்கங்களிலும் பலவகை உண்டு. ஒரே மாதிரியாக எல்லாரும் பின்பற்ற வேண்டுமென்பது இல்லாமல், அவரவர்களுக்கு ஏற்ற 15