பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி வீடு செய்தாலும் அவனுடைய சிறப்பு, குமரகுருபரன் ஆக இருப்பதில் விளங்குகிறது; அவன் தலைமை விளங்குகிறது. வள்ளி மண வாளனாக இருப்பதில் அவன் கருணை விளங்குகிறது. முதல் திருப்புகழ் அருணகிரிநாதப் பெருமான் குமரகுருபரனிடத்தில் ஈடுபாடு உடையவர். அவர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடினார். முதல் முதலாக அதனைப் பாடத் தொடங்கியபோது முருகப் பெரு மானுடைய திருவிளையாட்டில் பல திறங்கள் நினைவுக்கு வந்தன. அவற்றுள் முதலில் எதை வைப்பது என்று யோசித்தார். எந்தக் கோலத்தில் முருகனை முதலில் வைத்துச் சொல்வது என்ற ஆராய்ச்சி அவருக்குப் பிறந்தது. அவருடைய உள்ளத்தில் குமர குருபரனாகத் தோற்றம் அளித்தான் ஆண்டவன். அழகிய பீடத்தில் அவன் அமர்ந்து இருக்கச் சிவபெருமான் அவனுக்கு முன் நின்று அவன் புகழ் பேசி, உபதேசம் செய்ய வேண்டு மென்று கேட்க, இளைய பிரான் உபதேசம் செய்வதாக ஒரு காட்சி அவருக்குத் தோன்றியது. உடனே பாடத் தொடங்கினார். “முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர - எனஒதும் முக்கட்பர மர்க்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து" இந்த அலங்காரப் பாடலில் முருகனைப் பற்றிச் சொல்லும் போது, அவன் சிவபெருமானுக்குக் குருவாக இருந்தவன் என்று சொல்ல வருகிறார். - சிவபிரான் புகழ் சிவபெருமான் எத்தகையவன்? யானையை உரித்துப் போர்த்தவன். மூன்று புரங்களை எரித்தவன். இருகோட்டு ஒரு கைப் பொரு பூதரம் உரித்து, ஏகாசம் இட்ட புராந்தகற்குக் குருபூத வேலவன், நிட்ரே சூர குலாந்தகனே. இரண்டு கொம்புகளும் ஒரு கையும் உடைய, போர் செய் கின்ற மலை போன்ற யானையின் தோலை உரித்து, அந்தத் 249