பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு நாம் அடிமை ஆகிறபோது மாயைக்கும் அடிமையாகிவிடுகிறோம். மாயை என்ற பெரிய ஆற்றிலிருந்து வரும் கால்வாய் மனம். மனம் மூலமாக இருக்க நாம் விளையாடும் விளையாட்டை மன விளையாட்டு அல்லது மாயை விளையாட்டு என்று சொல்ல லாம். மாயை விளையாட்டு மாற வேண்டுமானால் மனத்தின் விளையாட்டு மாறவேண்டும். விளையாட்டும் வினையும் நாம் இறைவனுடைய குழந்தைகளாக இருக்கிறோம். ஆனால் நம்மிடத்தில் குழந்தைத்தன்மை இல்லை. குழந்தைகள் செய்வது விளையாட்டு என்று பொதுவாகச் சொல்கிறோம். ஆனால் பொல்லாத குழந்தைகள் விளையாட்டை வினையாக்கி விடுகின்றன. தீபாவளியில் குழந்தைகள் வாணம் விட்டு விளை யாடுகிறார்கள்; பட்டாசு வெடிக்கிறார்கள்; அது விளையாட்டு. ஆனால் அந்த வாணத்தைக் கூரைக் குடிசையில் ஒரு குழந்தை செருகிவிட்டால் அது விளையாட்டு ஆகுமா? அதனால் பெரிய வினை உண்டாகிவிடுகிறது. இதற்குக் காரணம், அந்தக் குழந்தை யிடத்தில் குழந்தைத் தன்மை இல்லாமல் பொல்லாங்கு இருப் பதே. அத்தகைய குழந்தைகளைப் பெற்ற தாய் தந்தையர்கள் அவர்களை வெளியில் விடுவதற்கே அஞ்சுவார்கள். பைத்தியம் பிடித்த குழந்தை ஒன்று இருக்கிறது. அது செய்கிற காரியங்களை விளையாட்டு என்று சொல்லலாமா? கையில் எதை எடுத்தாலும் வீசுகிறது; அடித்துக் கொள்கிறது. அதனால் அதற்கும் தீங்கு உண்டாகிறது; மற்றவர்களுக்கும் உண்டாகிறது. மனம் என்னும் குழந்தையும் நல்ல இயல்போடு இருந்தால் அது செய்வன விளையாட்டாக இருக்கும்; அதனால் நமக்குத் துன்பம் வராது. ஆனால் பெரும்பாலான மனக்குழந்தைகள் பொல்லாத குழந்தைகள், பைத்தியம் பிடித்த குழந்தைகளாக இருக்கின்றன. அந்தக் குழந்தையின் கையில் ஐந்து கத்திகளைக் கொடுத்திருக்கிறான் ஆண்டவன். ஐந்து இந்திரியங்களான கத்திகளை வைத்துக் கொண்டு இந்த மனம் என்னும் குழந்தை பிரபஞ்ச மேடையில் விளையாடத் தொடங்கினால் அது எத்தனை பேரைக் கொலை செய்யும் என்று கணக்குச் சொல்ல 259