பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3, பிரபஞ்சம் இருக்கிறது. துணையாகப் பல மக்கள் இருக்கிறார்கள் நாம் புதிய இடம் தேடவேண்டாம். புதிய கருவிகளைத் தேட வேண்டாம். இந்த விளையாட்டை மாத்திரம் மாற்ற வேண்டும். இதுவரையிலும் ஆடிய மாயை விளையாட்டை மாற்றி, தீய விளையாட்டாகிய அஞ்ஞான விளையாட்டை மாற்றி, தூய விளையாட்டாகிய ஞான விளையாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படித் தொடங்கினால் மெல்ல மெல்ல முடிவான இன்பத்தை அடையலாம். அன்பு நெறியில் நடக்கத் தொடங்கி னால் அது முதலில் வழியாக இருந்து பின்பு அதுவே இன்பமய மாக முடியும். 'அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே' என்பது திருமூலர் வாக்கு ஓர் ஏணி இருக்கிறது. அதையே மடித்துக் கட்டில் ஆக்கிவிடலாம் என்றால் அதைக் கொண்டு மாடியின் மீது ஏறலாம். ஏறி, அந்த ஏணியையே எடுத்துக் கட்டிலாகவும் மடித்துப் போட்டுக் கொண்டு படுக்கலாம். அத்தகையது அன்பு நெறி. 2 அருணகிரிநாதப் பெருமான் இந்த இரண்டு வகை விளை யாட்டையும் சொல்கிறார். ஒன்றை மாயை விளையாட்டு என்றும், மற்றொன்றை ஞானவிளையாட்டு என்றும் சொல்கிறார். விநோதம் என்ற சொல் விளையாட்டைக் குறிப்பது. ஞான விநோதம், மாயாவிநோதம் என்ற இரண்டையும் அவர் அலங்காரமாகப் பாட்டில் சொல்கிறார். நாம் இப்போது மாயா விநோதத்தில் ஈடுபட்டிருக்கிறோம்; ஞான விநோதத்தில் ஈடுபடவேண்டும். மாயா விநோதம் மாயா விநோதத்திற்குக் காரணமாக இருப்பது மனம். அதனால் வருகின்ற விளைவு துக்கம். உலகத்தில் நமக்குத் துயரங் கள் பல காரணங்களால் வருகின்றன. அவற்றுள் தலைமையாய் உள்ளவை மூன்று என்று சொல்லலாம். நாம் நம்முடைய உறவினர் எவரையேனும் இழந்து விட்டால் துயர் அடைகிறோம். நமக்குரிய பொருளை இழந்துவிட்டால் துன்புறுகிறோம். நோய் 266