பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பாண்டவர்களும் இருந்தார்கள். துரோணர், கிருபாசாரியார் முதலியவர்கள் இருந்தார்கள். பாஞ்சாலியின் துகிலைத் துச்சாதனன் உரிந்தான். தன் கணவன்மார்கள் தன்னைக் காப்பாற்ற மாட்டார்களா என்று அவர்களைப் பார்த்து, 'ஐயகோ' என்று அலறினாள். அவர்களால் காப்பாற்ற முடிந்ததா? வாயடைத்துத் தலை குனிந்திருந்தார்கள். நேர்மை தவறாத ஞானிகள் ஒர் அபலைப் பெண்ணுக்கு அநீதி இழைப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா என்ற நம்பிக்கையில் அவர்கள் பக்கம் பார்த்து அலறினாள் திரெளபதி. அவர்களும் தலை குனிந்து விட்டார்கள். பெண்ணுக்கு அநீதி இழைப்பதைப் பார்த்துக் கொண்டு ஆண்கள் வாளா இருப்பார்களா என்று எண்ணி வீரமிக்க ஆண்களை எல்லாம் பார்த்தாள். அவர்கள் கோழை களைப் போலத் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியிலே தன் கையே தனக்கு உதவி என்று கைகளால் ஆடையைப் பற்றிக்கொண்டாள். மேலும் துச்சாதனன் ஆடையை உரிய முற்பட்டான். அப்போதுதான் அவள் 'உன்னை விட்டால் எனக்கு வேறு கதியில்லை கண்ணா! என்னைக் காப்பாற்ற மாட்டாயா?" என்று அலறிய வண்ணம் தன் இருகைகளையும் தூக்கித் தலைமேல் வைத்துக் கொண்டு, 'கோவிந்தா கோவிந்தா!" என்று கூப்பிட ஆரம்பித்தாள். தன்னைச் சேர்ந்தவர்களும் பிறரும் காப்பாற்ற மாட்டார்களா என முதலில் எண்ணினாள். அவர் களால் பயனில்லை என்று தெரிந்தவுடன் ஆண்டவனே சரணம் என்ற முழு நம்பிக்கையுடன், தன் செயல் ஒழிந்து அலறினாள். அவளைக் கண்ணன் காப்பாற்றினான். அவளுக்கு ஏற்பட்ட முழு நம்பிக்கையைப் போல நமக்கும் இறைவனிடம் நம்பிக்கை ஏற்பட்டால் அவன் திருவருளைப் பெறலாம். அவள் தன் கையை நம்பி அதனால் ஆடையைப் பற்றிக் கொள்ளும் போதுகூட அவன் அருள் செய்யவில்லை. கையையும் விட்டுத் தலைமேல் குவித்தபோது உதவினான். இம்மையும் மறுமையும் இறைவனிடத்தில் முழு நம்பிக்கை வைத்தால் இந்த உலகத் திலேயே இன்பம் உண்டாகும்; மறு உலகத்திலும் இன்பம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. இதைச் சொல்ல வருகிறார் அருண 土8