பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் 1 மாயா விளையாட்டாகிய நம்முடைய வாழ்க்கையில் மயல் அடைந்து உருகிப் பருகிப் பெருகும் நிலையைப் போன பாட்டிலே பார்த்தோம். மணிவாசகப் பெருமான் உருகிப் பெருகும் இன்ப நிலையைச் சொன்னதையும் பார்த்தோம். உருகிப் பருகிப் பெருகும் இந்த மாயாவிநோத மனோதுக்கம் மாய வேண்டுமென்று முருகனிடத்தில் விண்ணப்பம் செய்து கொண்ட அருணகிரிநாதர் அடுத்த பாட்டிலேயே தம்முடைய உண்மை நிலையை வெளிப்படுத்தி விடுகிறார். 'மாயா விநோத மனோ துக்கம் மாய்வதற்கு நின் அருளை எப்போதும் தருவாய்?" என்று கேட்ட கையோடு இந்தப் பாட்டைப் பாடுகிறார். மாதர் மயலில் உருகிப் பருகித் துக்கம் பெருகியதே என்று அங்கே சொன்னார். இங்கே அவர் பெற்ற ஆனந்த நிலையைச் சொல்லும் போது உருகிப் பெருகும் மற்றொரு நிலையைச் சொல்கிறார். இதுதான் அவருக்குரிய இயல்பான நிலை. புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றும் பரமானந்த சாகரத்தைப் பற்றி இப்போது சொல்ல வருகிறார். இன்பமும் துன்பமும் மனிதன் உலகத்தில் வாழும்போது இன்பத்தை வேண்டு கிறான்; துன்பத்தை வேண்டுவது இல்லை. ஆனால் எல்லோரும் இன்பம் அடைகிறார்களா என்று பார்த்தால் அதுதான் இல்லை. சின்னஞ்சிறு குழந்தை கண்ணுக்கு அழகாக இருக்கிறதென்று எண்ணிக் கண்ணாடியை எடுத்து விளையாடுகிறது. கையிலே கீறிக் கொண்டு ரத்தம் வந்து கத்துகிறது. அதனை முதலில் எடுக்கும்போது அதனால் துன்பம் உண்டாகுமென்று தெரிந்து கொள்வதில்லை. முன் அநுபவமும் அறிவும் இல்லாமையினால்