பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 உடைந்த கண்ணாடியை எடுத்துக் கீறிக்கொண்டு துன்பம் அடை கிறது. துன்பம் அடையவேண்டும் என்பது அதன் நோக்கம் அன்று. துன்பம் அடையும் வகையில் அதன் அறியாமை அதனைச் செலுத்துகிறது. அதுபோலவே மனிதன் துன்பத்தை அடைய வேண்டுமென்று விரும்புவது இல்லை; அவன் எப்போதும் இன்பமே வேண்டுமென்று விரும்புகிறான். ஆனால் அது எங்கே கிடைக்குமென்று அறியாமையினால் துன்புறுகின்றான். இன்பம் கிடைக்குமென்று எதை எதையோ நினைந்து எண்ணி ஏமாந்து, தான் நினைத்தபடி முடியாமல் துன்பம் உண்டாவதைக் காண் கிறான். அவன் செய்கிற முயற்சிகள் எல்லாம் பெரும்பாலும் துன்பமாகவே முடிகின்றன. உண்ணும்போது சில பண்டங்கள் இனிப்பாக இருக்கும். ஆனால் உடம்புக்கு ஆவதில்லை. நாக்குக்கு இன்பமாக இருந்தது உடம்புக்குக் கோளாறு தரும். ஐந்து இந்திரியங்களால் உண்டாகின்ற இன்பம் எல்லாம் அப்போதைக்கு இன்பம் என்று தோன்றினாலும் அவற்றால் விளைகின்ற துன்பம் மிகப் பெரிது. மனிதன் இந்திரியங்களால் உண்டாகின்ற இன்பத்தை உண்மை இன்பம் என்று கருதி ஏமாந்து போகிறான். அதனால் அந்த இந்திரியங்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கே உலக வாழ்க்கை முழுவதையும் வீணடிக்கிறான். அது அப்போதைக்குப் போலி இன்பமாகத் தோன்றி, பின்பு அடுத்தடுத்து வருகின்ற பிறவிப் பெருந்துன்பத்தைக் கொடுக்கிறது. சிற்றின்பமும் பேரின்பமும் அப்போதைக்கு இன்பமாகத் தோன்றுவனவற்றைச் சிற்றின்பம் என்று சொல்வார்கள். ஐந்து பொறிகளின் வாயிலாகக் கிடைக் கின்ற எல்லா இன்பங்களுமே சிற்றின்பந்தான். சிற்றின்பம் என்ற பெயர் இருந்தாலும் அதனை இன்பம் என்று சொல்வதற்கு இல்லை. ஏதோ விவகாரத்திற்காகச் சிற்றின்பம் என்று சொல் கிறார்கள். சிற்றின்பம் என்ற பெயரே பேரின்பம் என்று மற்றொன்று இருப்பதை உணர்த்தும். ஒரு வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒரு பிள்ளை பள்ளிக்கூடம் போய் இருக்கிறான்; மற்றொருவன் விளையாடுகிறான். 'விளையாடிக் கொண்டிருக்கிற 278