பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 இன்ன நாடு என்ற வரையறை இல்லாமல் எல்லா இடத்தும் அத்தகைய பெரியவர்கள் தோன்றியிருக்கிறார்கள்; இன்னும் தோன்றுவார்கள். இப்படிப் பலகாலமாகப் பல பெருமக்கள் பேரின்பத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தாலும் நமக்கு நம்பிக்கை உண் டாவது இல்லை. மதிப்பைக் கருதிப் பேச்சளவில் நாம் நம்பு வதாகக் காட்டுகிறோம். 'அப்படி ஒன்று இருக்குமா? நமக்குக் கிடைக்குமா?" என்று ஐயமே நம்முடைய உள்ளத்தில் அலை வீசுகிறது. இதற்கு முக்கியமான காரணம் என்ன? அதைத்தான் மாயை என்றும் திரோதம் என்றும் சொல்வார்கள். - நாம் நுகர்கின்ற சிற்றின்பம் கை கண்டதாகத் தோற்றுகிறது. அந்த இன்பத்திற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்யும் போதே பல சமயங்களில் அது கைகூடுவது இல்லை. அதனால் ஏமாற்றம் அடைகிறோம். இந்த ஏமாற்றத்தால், பேரின்பம் என்ற ஒன்று நம் முயற்சினால் கிடைப்பது சந்தேகம்' என்ற நினைவு தோன்றி விடுகிறது. மிகவும் படித்தவர்கள்கூடப் பேரின்பம் என்பது வெறும் கற்பனை என்று தம்முடைய மனசில் நினைத்துக் கொண் டிருக்கிறார்கள். பேரின்பத்தைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் பிறருக்கு விரிவாக எடுத்து உரைக்கும் பலர் தம்முடைய சொந்த வாழ்க்கையில் அவற்றில் நம்பிக்கை வைத்திருப்பவர்களாகத் தோற்றுவது இல்லை. சொல்வது ஒன்று, அநுபவிப்பது ஒன்றாக அவர்களுடைய வாழ்க்கை நடை பெறுகிறது. ஏட்டுச்சுரைக்காய் போலப் பிறருக்கு உபதேசம் செய்யும் வகையில் அவர்கள் பெரியவர்கள் எழுதிய நூலை எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால் அவர்களுடைய உள்ளத்தில் அவற்றில் சிறிதும் நம்பிக்கை இருப்ப தில்லை. மெத்தப் படித்தவர்களே நம்பிக்கை கொள்ளாமல் இருப்பார்களானால், அவர்களை அப்படி ஆக்கும் மாயா சக்திக்கு எவ்வளவு ஆற்றல் இருக்க வேண்டுமென்பதை நினைந்து பாருங்கள். அவர்களுக்கு நம்பிக்கை வராததற்குக் காரணம் இறைவனுடைய திருவருள் கிடையாமையே. 'கண்டறியாதன கண்டேன்’ பல பல முயற்சி செய்து இறைவனுடைய திருவருளைப் பெற வேண்டுமென்று வருந்திய பலர் இந்த நாட்டில் இருந் 23O