பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 உரமிட்டு இறைவனுடைய திருவருட் கனி பழுக்கும்படி செய் வதுதான் நல்ல பயனைப் பெறும் வழி. இவ்வாறு பெற்றவர்கள் பலர் நமக்குத் தாம் பெற்ற இன்பத்தைச் சொல்கிறார்கள். 'நான் கோயில் சென்று இறைவனைக் கண் டேன். திருச்செந்தூர் போய் முருகப் பெருமானை வழிபட்டேன். அவன் இத்தகைய இன்பம் தந்தான்' என்று சொல்லிக் கொள் கிறார்கள். எந்த விதை யானாலும் மரம் முளைக்கும். எந்த மரம் ஆனாலும் நிழல் உண்டாகும். அந்த அந்த மரத்திற்கு ஏற்ற நிழ லாக அமையும். ஆனால் எல்லாம் நிழல்கள். பெரியவர்களுடைய தொடர்பினால் நல்ல உபதேசம் பெற்று எந்த மூர்த்தியை உபாசனை பண்ணினாலும் அந்த உபாசனையின் பயன் நமக்கு நிழல் போன்ற அருளைக் கிடைக்கும்படி செய்யும். திருநாவுக்கரசர் அநுபவம் திருநாவுக்கரசர் கண்ட இன்பமும், அருணகிரிநாதர் கண்ட இன்பமும், நம்மாழ்வார், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் கண்ட இன்பமும் இன்பந்தான். அப்பர் சுவாமிகள், 'தேடிக் கண்டு கொண்டேன்' என்று சொல்லும்போது அவருடைய உள்ளத்தில் எதை நினைக்கிறார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் தாம் பெற்ற பேரின்பத்தை நினைத்துக் கொண்டுதான் அவர் அப்படிப் பேசி இருக்க வேண்டும். 'குற்றாலப் பெருமானைக் கண்டு ஆனந்தம் அடைந்தேன்' என்று அவர் பாடுகிறார். அவனை என் உள்ளத்தில் கண்டுகொண்டேன்' என்கிறார். 'தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொனாத் தேவனை என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்' என்பது அவர் பாட்டு. "இது வரைக்கும் நான் இந்த அநுபவத்தைப் பெற்றது இல்லை. பெறவில்லையே என்று வேதனைப் பட்டுக் கிடந்தேன். நான் மாத்திரமா அப்படி இருந்தேன்? இந்த இன்பத் திற்கு உறைவிடமாகிய இறைவனை மிகப் பெரியவர்களாகிய திருமாலும், நான்முகனும் தேடிக் காணவில்லை. அவர்கள் காணவேண்டுமென்ற ஆசை உடையவர்களாக இருக்கிறார்கள். 236