பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 அத்தகைய அமுதத்தையா அருணகிரிநாதர் கண்டார், அவ; கண்டது பிறவியை மாய்க்கின்ற பேரமுதம். பேரின்பம், சிற்றின் பம் என்று வகைபிரித்துச் சொல்வதுபோலத் தேவா முதத்தைச் சிறிய அமுதம் என்றும், ஆண்டவன் அருளால் வருகின்ற இன்ப அமுதத்தைப் பெரிய அமுதம் என்றும் சொல்லலாம். சிறிய அமுதத்திற்கு அவர்கள் அத்தனை முயற்சி செய்தார்கள் என்றால் பெரிய அமுதத்திற்கு எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்! தாம் நுகர்ந்த அமுதம் ஒரு பெரிய கடலிலே உண்டாயிற்று என்று சொல்ல வருகிறார் அருணகிரியார். அந்தக் கடல் இன்ப மயமான கடல்; ஆனந்த சாகரம்; தனக்கு மிஞ்சி எதுவும் இல்லாத மிகச் சிறந்த பரமானந்தக் கடல் அது. அப்பர் சுவாமிகள், 'என் உள்ளே தேடிக் கண்டு கொண் டேன்' என்று சொன்னது போலவே இவரும் சொல்கிறார். இத்தகைய வாசகங்கள் இரண்டு பேரும் பெற்ற இன்பம் ஒன்றே என்பதைத் தெளியச் செய்யும் அடையாளங்கள். இனி அருணகிரி யார் சொல்வதைப் பார்க்கலாம். அந்தப் பரமானந்த சாகரம் எங்கே இருக்கிறது என்பதைச் சொல்கிறார். புத்திக் கமலம் செயல் மாண்டு அடங்கப் புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித் தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரத்தே. அருணகிரியார் சொல்லும் பரமானந்தக் கடல் மிக்க வியப் பானது. அது ஊற்றாகத் தோன்றிக் கடலாக விரிந்ததாம். மலை யில் இருந்து உண்டாகும் ஊற்று வரவர ஆறாக மாறுவதைக் காண்கிறோம். ஆனால் கடலில் ஊற்று இருக்கிறதா என்பதை நாம் அறியமுடியாது. கடலிலே தண்ணீர் இருப்பதனால்தான் மற்ற இடங்களிலும் ஊற்றுப் புறப்படுகிறது என்று நிலநூல் வல்லார்கள் சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக இருக்கிற கடலுக்கு ஊற்று இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அருணகிரிநாதர் சொல்லுகிற பரமானந்தக் கடல் முதலில் ஒரு சிறிய ஊற்றாகப் புறப்பட்டது. மலையிலிருந்து ஒர் 283