பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் ஆற்றுக் கிளம்பிப் பின்பு சற்றே பெரிதாகிக் கால்வாய் ஆகி, அது பின்பு ஆறு ஆகி அதுவே ஒர் இடத்தில் தங்கிப் பெரிய கடலாகிவிடுகிறதென்று வைத்துக் கொள்ளலாம்; அந்தக் கடலைப் போல அது இருக்கிறது. ஊற்றும் கடலும் பரமானந்தக் கடலின் மூல ஊற்று எங்கே புறப்பட்டது என்பதை அருணகிரிநாதர் சொல்கிறார். புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித் தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே. புத்தியாகிய தாமரையில் இருந்து உருகிப் பெருகி இந்தக் கடல் விரிந்து நிற்கிறதாம். உள்ளக் கமலத்தில் ஊற்று எடுக்கும் என்றால், நமக்கும் உள்ளக் கமலம் இல்லையா? நம்முடைய உள்ளத்தில் அந்த ஊற்றுப் புறப்படக்கூடாதா? உள்ளக் கமலத் தில் ஊற்றுப் புறப்படவேண்டுமானால் அதற்குமுன் ஒன்று நிகழ வேண்டும். நம்முடைய உள்ளக் கமலம் குவிந்திருக்கிறது. குவிந்த கமலத்தில் மணமும் இராது; தேனும் தோன்றாது. தாமரை எப்போது குவிந்திருக்கும்? சூரியன் இல்லாத போது, இரவு நேரத்தில், இருட்டில் குவிந்திருக்கும். நாம் அஞ் ஞான அந்தகாரத்தில் வாழ்கிறோம். இந்த இருளில், நம்முடைய புத்தியாகிய கமலம் குவிந்திருக்கிறது. இது முதலில் திறக்க வேண்டும்; பின்பு உள்ளே இருந்து தேன் ஊற்றுக் கிளம்பும். கமலம் விரிய வேண்டுமானால் கதிரவன் வானத்தில் தோன்ற வேண்டும். கதிரவன் ஒளி பட்டாலன்றித் தாமரை மலராது. நம்முடைய உள்ளமாகிய கமலம், ஞான சூரியனாகிய முருகப் பெருமானுடைய அருள் பட்டால்தான் விரியும். பிரபஞ்சத்தின் நிழல் பட்டுப் பட்டுக் குவிந்திருக்கின்ற கமலம் ஆண்டவன் அருள் பட்டுப் பட்டு விரியும். - அக இருள் நாம் இருட்டில் விவகாரம் நடத்துகிறோம். கண்ணுக்குத் தோன்றுகின்ற இருட்டுத்தான் இருட்டு என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அகக்கண் தெரியாமல் செய்கிற அஞ்ஞானத்தைப் 289