பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் செயல்கள் குறைந்து கொண்டு வரவர உள்ளக் கமலம் விரிந்து வரும். இறைவனுடைய திருவருள் இன்பம் மெல்ல மெல்லத் தலைப்படும்; புத்திக் கமலத்தில் உருக்கம் உண்டாகி ஆனந்த ஊற்று எழும் என்று அருணகிரி நாதர் சொல்கிறார். அறிவும் அருளும் பொதுவாக மனம் என்பது அந்தக்கரணம் என்ற பெயரால் குறிக்கப்படும். அந்தக்கரணம் நான்கு பகுதியாக அமைந்தது. முன்பும் இது பற்றிச் சொல்லியிருக்கிறேன். மனம், சித்தம், அகங் காரம், புத்தி என்பனவே அவை. ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றி ஆசைப்படுவது மனம். எப்போதும் நம்முடைய உணர்வோடு இருப்பது அகங்காரம். ஒன்றைக் கடைப்பிடித்துத் திண்ணமாக இருப்பது சித்தம். இது இத்தகையது என்று வேறு பிரித்துப் பார்ப்பது புத்தி. மனம் நல்லதாக இருந்தால் சித்தப் பகுதி வன்மை பெறும். அதைத்தான் Wi Power" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நல்லது இன்னது என்று புத்தியினால் தெரிந்து கொண்டு அதனிடத்தில் நிலைத்து நிற்கச் சித்தம் உதவும். அறிவு விகாசம் அடைவதைப் புத்திக் கமலம் விரிவதாகச் சொல்லலாம். அறியாமை என்றும் இருள் போனால் அறிவு மலரும்; அறிவு மலர்ந்தால் ஆனந்த ஊற்று அங்கிருந்து எழும். இங்கே அறிவு என்று சொல்வது, வெறும் பொருளை உணர் கிற அறிவு அன்று. ஞானம் என்ற பெயரால் நம்முடைய பெரி யோர்கள் குறிப்பிட்டது இறைவனுடைய திருவருள் இன்ப அநுபவத்தைப் பெறுவதற்குக் காரணமான ஞானத்தையே. அந்த ஞானத்தோடு அருள் கலந்து வரும். அந்த ஞானத்தோடு பக்தியும் கலந்திருக்கும். இறைவனுடைய திருவருள் நினைவின்றி வருகிற அறிவு பயன் இல்லாத அறிவு, மணம் இல்லாத மலர் ஈரம் இல்லாத வறண்ட பொருள். மனம் விரிந்தால் உள்ளத்தில் இருக்கிற பொருள் வெளிப் படுகிறது. புத்திக் கமலம் விரியும்போது அங்கே எம்பெருமான் இருப்பது புலனாகிறது. புத்தியாகிய கமலத்தில் தேன் உருகிப் பெருகவேண்டும். அந்த உருக்கத்திற்கு மூலமானது அன்பு. இறைவனுடைய திருவருளைப் பெற வேண்டுமென்று ஆசைப் க.சொ. 11-20 295