பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் வரவரப் பெருகுதல் இறைவனுடைய திருவருளால் அவனுடைய திருவுரு வத்தை உள்ளத்தில் பதித்து அறிவுப் பக்குவம் பெற்று அன்போடு கலந்து சாதனை செய்வோமானால் ஆனந்த ஊற்றுத் தோன்றும்; மேலும் மேலும் பெருகும். அப்படிப் பெருகி வரும்போது மெல்ல மெல்லப் பேத புத்தி மாய்ந்து வரும். அருகில் இருக்கிற கரைகள் உடைந்து போகும்; பள்ளமும் போய்விடும். முன்பு என் மனைவி மக்கள், என் சொத்து என்று சொல்லிக் கொண்டிருந் தவன் 'என்' என்பதை மறந்துவிடுவான். 'என்' என்பது 'எம்' ஆகிவிடும். வீட்டை நினைப்பதை மாற்றி ஊரை நினைப்பான். பின்பு ஊரையும் மறந்து நாட்டை நினைப்பான். அதனையும் மறந்து உலகத்தையே நினைப்பான். அதற்குப் பிறகு உலகம் என்ற நினைவு போய்விடும்; அண்டத்தை நினைப்பான். அண்டத்தையும் விட்ட பிறகு உயிர்க் கூட்டத்தை நினைப்பான். எல்லாவற்றையும் கடந்த ஒன்றைக் கடைசியில் நினைப்பான். பின்பு அந்த நினைப்பும் தானே மறைந்துவிடும். எப்போதும் எல்லாமாய் இருக்கின்ற ஒன்றை நினைப்பது தான் ஒன்றையும் நினைக்காத நினைப்பு, நினைப்பிலா நினைப்பு. ஆனந்த வெள்ளம் பெருகி நிற்கும்போது எல்லை எல்லாம் உடைந்துவிடுகிறது. நான், எனது' என்ற இரண்டும் இருக்கிற வரைக்கும் எல்லை உண்டு. அவை போய்ச் செயல் மாண்டு ஒழிந்தால் எல்லை இல்லாத நிலை வந்துவிடும். அகண்ட பாவனை எல்லாமாய் அல்லதுமாய் இருக்கும் பரம்பொருளின் நினை வினால் அகண்ட பாவனை வரும்போது நாம் வேறு என்ற நினைவே எழாது. பரமானந்த வெள்ளம் படர்ந்திருக்கும்போது அந்த அகண்ட பாவனை உண்டாகும். ஆற்றில் தண்ணீர் இல்லாத போது நடந்தால் மிகவும் விழிப்புடன் நடக்க வேண்டும். முள் இருக்கிறதா என்றும் அசுத்தப் பொருள் இருக்கிறதா என்றும் பள்ளம் இருக்கிறதா என்றும் பார்த்து நடக்க வேண்டும். வெள்ளம் வந்து விடுகிறது. அந்த வெள்ளத்தின்மீது மிதக்கும் ஒடத்தில் ஏறிக்கொள்கிறோம். அப்போது எந்த இடத்தில் முள் இருக்குமோ, பள்ளம் இருக்குமோ என்று பார்க்க வேண்டியது 297