பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 இல்லை. எந்த இடத்திலே கண்ணாடித்துண்டு காலில் குத்துமோ என்று பயம் வேண்டியதில்லை. தண்ணீர் இல்லாதபோது ஒவ்வோர் இடத்திலும் யோசனை பண்ணி அஞ்சி நடந்து கொண்டிருந்த நாம் வெள்ளம் வந்த பிறகு அதே இடத்தின்மேல் பாகையில் அந்தக் கவலைகளுக்கு இடமே இல்லாமல் சுகமாகப் போகி றோம். காரணம் அப்போது மேடு பள்ளமற்ற சமமான வெள்ளம் பரந்ததுதான். உள்ளக் கமலம் விரிந்து அதனூடே ஆனந்தத் தேன் ஊற்றாகத் தோன்றி மேலே பெருகிப் பரவும்போது அதற்கு முன்னாலே வெவ்வேறாகக் கண்ட நிறங்களும், உருவங்களும் ஒன்றாகி விடும். புலன் நுகர்ச்சி எல்லாம் மேடு பள்ளம் இல்லாமல் மட்டமாகிவிடும். அவன் எல்லாவற்றுக்கும் மேலே மிதப்பான். அந்த இடத்தை விட்டுப் போய்விடுவான் என்பது அல்ல. சரீரம் இருக்கும் மட்டும் இந்த உலகத்தில் இருக்கத்தான் வேண்டும். கரைக்குச் சென்றவனும் ஆற்றுப் படுகையில் இருக்கிற கண்ணாடி, முள் முதலியவற்றுக்கு அஞ்சமாட்டான். ஆற்றில் வெள்ளத்தின் மேல் இருக்கிறவனும் அஞ்சமாட்டான். அப்படியே பிரபஞ்சத் தில் இருந்தாலும் செயல் மாண்டு ஒழிந்து பரமானந்தத்தில் மிதந்தால் அவனுக்கு ஏனையவர்கள் காணும் இன்ப துன்ப வேறுபாடுகள் இருப்பது இல்லை. அந்த ஆனந்த வெள்ளம் புவனத்தை எற்றிவிடுகிறது. பிரபஞ்ச வாசனை அத்தனையும் அற்று நிற்கிற நிலை அது. புவனம் எற்றுதல் புவனம் எற்றித் தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே. சாலைகளில் நிழலுக்கு செடி நடுவதை நாம் பார்த்திருக்கிறோம். செடி நடும்போது ஆடுகள் கடிக்காமல் இருக்க வேண்டுமென் பதற்காகச் சுற்றிலும் இரும்பினாலேயோ, முள்ளாலேயோ வேலி அமைப்பார்கள். நட்ட செடி பெரிய மரமாகி வளர்ந்து விடுகிறது. அப்போது அங்கே வேலி இருக்குமா? அது அற்றுப் போய் விடும். அது போலவே இந்த உள்ளக் கமலத்தில் தோன்றிய ஊற்று உள்ளத்தை அழித்து விடுகிறது; அல்லது உள்ளமே அதில் கரைந்து இல்லாமல் போய்விடுகிறது. 298