பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் வரிசையான ஆறுமுகத்தை நாம் கண்ணாலே கண்டு பின்பு கருத்தாலும் காண வேண்டும். கண்ணாலே காண்பதற்குக் கற் கோயில்கள் பயன்படுகின்றன; கருத்தாலே காண்பதற்குச் சொற் கோயில் பயன்படும். ஆறுமுகநாதனின் எல்லா அலங்காரங் களையும் பார்த்தால்தான் நம் மனம் அந்த திருவுருவத்தில் கவியும். அப்படியே ஆறுமுகத்தைப் பற்றிச் சொல்கிற பாடல்களையும், புகழ்களையும் தெரிந்து கொண்டால் பின்னும் நன்றாகக் கவிந்து அந்தத் திருவுருவத்தைப் பதித்துக் கொள்ளும் நிலை வரும். நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் எம்பெருமானுடைய ஆறுமுகங்களும் இன்ன இன்ன செயல்களைச் செய்கின்றன என்று தெரிவிக்கிறார். கதிர் விரிக்கும் முகம் முருகப் பெருமானுடைய ஆறு திருமுகங்களும் ஆறு வேறு காரியங்களைச் செய்கின்றன. ஒரு முகம் உலகம் எங்கும் பரந் திருக்கின்ற இருளை எல்லாம் போக்கி ஒளி தருகிறது. கதிரவன், திங்கள், தீ என்னும் மூன்றும் உலகிலுள்ள இருளைப் போக்கும் மூன்று சுடர்கள். அந்தச் சுடர்களுக்கும் ஒளி உதவி இருளைப் போக்க உதவும் முகம் ஒன்று. "மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்.” வரம் கொடுக்கும் முகம் அடுத்த முகம் தன்பால் அன்பு செய்பவருடைய விருப்பத்தை நிறைவேற்றுகின்றது. “ஒருமுகம் 'ஆர்வலர் ஏத்த அமர்ந்துஇனிது ஒழுகிக் காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே.” ஆர்வலர் - பக்தர்கள். வேள்வி காக்கும் முகம் மறை வழியே நின்று வேள்விகளைச் செய்யும் அந்தணர்கள் உலகத்திற்கு வரும் தீங்குகளைத் தம்முடைய செயலால் ஒழிக் 3O7