பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் மகிழும் முகம் இனி ஆறாவது முகம் இன்பத்தை வழங்குகிறது. ஆன்மாக் களுடைய பிரதிநிதியாக இருக்கின்ற வள்ளியெம் பெருமாட்டிக்கு எம்பெருமான் இன்பம் வழங்கினான். அந்தச் செயலைச் செய்வது ஒரு முகம். - 'ஒரு முகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகைஅமர்ந் தன்றே.' முருகன் இருளைப் போக்கி ஒளிகாட்டுவான் என்றும், உலகத்திற்குப் பொதுவாக ஒளி கொடுத்தாலும் சிறப்பாகத் தன்னை அண்டி அன்பு செய்வாருக்கு இன்பம் தருவான் என்றும், உலகத்தில் பிறருக்கு நலம் செய்கின்ற மக்கள்ைக காப்பாற்று வான் என்றும், அறியாமையை நீக்குவான் என்றும், தீங்கு விளை விப்பார்களை அடக்குவான் என்றும், ஆன்மாக்களுக்கு இன்பம் தருவான் என்றும் கொள்ளும்படியாக இந்த முகங்களின் செயல் கள் அமைந்திருக்கின்றன. ஒளி படைத்த உலகத்தில் அன்பர்கள் வந்து அவனை வழிபட்டுத் தமக்கு வேண்டிய வரங்களைப் பெற, ஒருபால் அந்தணர்கள் வேள்வியைச் செய்ய, பின்னும் ஒருபால் ஞானிகள் உபதேசம் பெற, வேறு ஒருபால் அசுரர்கள் ஒழிய, பின்னும் ஒருபால் வள்ளியெம் பெருமாட்டி இன்பத்தைப் பெறுகிறாள். இந்த ஆறுமுகங்களையும் வரிசையாகப் பெற்றிருக்கிறான் முருகன். நக்கீரர் சொல்கின்ற முறையில் அழகான வரிசை அமைந் திருக்கிறது. சூரியன் உதயம் ஆகி எல்லோருக்கும் இன்பத்தைத் தருவதுபோல இங்கே முதல் முகம் உதயமாகி இருளைப் போக்கு கிறது; கடைசி முகம் வள்ளியெம்பெரு மாட்டிக்கு இன்பம் தருகிறது. மூன்று நிலை இப்படி அழகாக அமைந்த ஆறு முகங்களையும் திருமுரு காற்றுப் படையில் பார்க்கிறோம். அதைப் படித்து நம் உள்ளத்தில் வைத்துக் கொண்டால், கோயிலில் உள்ள முருகப் பெருமானுடைய திருவுருவத்தைக் காணும்போது அந்தச் 309