பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 செய்திகள் நம்முடைய நினைவுக்கு வரும். அந்தத் திருமுகங் களின் மூலமாக இந்த உயர்ந்த கருத்துக்கள் நம் உள்ளத்தில் படம் போலத் தோன்றும். தோன்றாவிட்டாலும் தோன்றும்படியாக நினைத்துப் பார்க்கவேண்டும். பக்தர்களுக்குக் கோயிலில் காணும் முகங்கள் மலராலும், அணியாலும் அலங்காரம் பண்ணப் பெற்றன வாக இருக்கும். திருமுருகாற்றுப் படையைப் படித்த பிறகு அந்த அலங்காரங்களைக் கண்ணாலே காணுவதோடு நில்லாமல் அவற் றின் செயல்களையும் நினைத்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக் கிறது. இது இரண்டாவது நிலை. அது போல் மூன்றாவது நிலை ஒன்று உண்டு. அதுதான் பரமானந்த சாகரத் தில் அமுத மயமாக இந்த ஆறு முகங்களையும் காணும் நிலை. இதனை அருணகிரிநாதப் பெருமான் அநுபவத்தில் உணர்ந் தார். இந்தப் பாட்டில் அதைச் சொல்கிறார். ★ பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கும் அமுதுகண் டேன்செயல் மாண்டடங்கப் புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனம்எற்றித் தத்திக் கரைபுர ளும்பர மானந்த சாகரத்தே (செயல்கள் ஒடுங்கி கரணங்கள் அடங்கிக்கொண்டுவரப் புத்தியாகிய கமலத்தில் உருகிப் பெருக்கெடுத்துப் புவனங்களைத் தகர்த்தெறிந்து மேலே பொங்கிக் கரைபுரளும் பரமானந்தத் கடலில் வரிசையாகிய திரு முகம் ஆறுடனும் பன்னிரு தோள்களுமாக இனித்திருக்கும் அமுதத்தைக் கண்டேன். பச்தி - வரிசை. எற்றி - தகர்த்து) - 31C