பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் மனமும் வண்டும் தேனைத் தொகுக்கும் வண்டைப்போல நல்ல எண்ணங் களைத் தொகுத்து வைத்திருக்கும் மனம் சிலருக்கு உண்டு. ஆனால் பெரும்பாலருடைய மனம் உயர்ந்த தேனை நாடாமல் பிறரால் கழிக்கப்படும் பொருள்களை உருட்டுகின்ற வண்டைப் போல இருக்கின்றன. தாமரையில் உள்ள தேனைத் தொகுக்கும் வண்டைச் சிறந்த வண்டாகக் கொள்வது இயல்பு. மிகச் சிறந்த வர்களுடைய மனம் தண்டாமரைத் தேனைத் தொகுக்கும் வண்டைப் போன்றது. மனத்திற்கு வண்டை உவமையாகச் சொல்வது மரபு. மனம் வண்டானால் அது சென்று தேனைச் சேகரிக்கும் தாமரை ஒன்று இருக்க வேண்டும். அந்தத் தாமரையைத்தான் அருணகிரி நாதர் இந்தப் பாட்டில் சொல்கிறார். திருவடித் தாமரை இறைவனுடைய திருவடியைத் தாமரை போன்றது என்று சொல்வார்கள். பாதாம்புயம், பாதபத்மம் என்று பெரியவர்கள் தம்முடைய துதியில் சொல்வது வழக்கம். இந்தப் பாட்டில் அருணகிரியார் பாதாம்புயம் என்று சொல்கிறார். இறைவனுடைய திருவடி தாமரையைப் போல இருக்கிறது. இரண்டுக்கும் உள்ள பொதுத் தன்மைகள் பல. தாமரை மெத் தென்று இருப்பது போல இறைவனுடைய திருவடியும் மெத் தென்று இருக்கிறது. இறைவனுடைய திருவடி தாமரையைப் போலச் சிவப்பாய் இருக்கிறது. அருணதள பாதபத்மத்தைத் திருப்புகழில் அருணகிரியார் சொல்கிறார். தாமரை மலர் தூயது; இறைவன் அடியும் தூயது. தாமரை மலர் மங்களம் பொருந் தியது; இறைவன் திருவடியும் அத்தகையதே. தாமரை மலர் குளிர்ச்சியாக இருக்கும் நீரில் முளைப்பது; அப்படியே இறை வனுடைய திருவடி அன்பு நிறைந்த பெரியவர்கள் உள்ளத்தில் முளைப்பது. தாமரைவிரிவாக இருப்பது; இறைவன் திருவடியும் விரிந்திருப்பது. தாமரை மலர் பொய்கையில் எவ்வளவு நீர் இருக்கிறதோ அதற்குக்தக்கபடி உயர்ந்து கொண்டே வரும்; அப்படியே அடியார்களுடைய உள்ளம் எவ்வளவுக்கு எவ்வளவு அன்பு நிறைந்து இருக்கிறதோ, அதற்கு ஏற்றபடி இறைவன் திருவடி உயர்ந்து பயனைத் தந்து கொண்டே வரும். இவ்வாறு 313